அமைச்சர்களின் புருவங்களை உயர்த்திய தமிழ் முரசு செய்தியாளரின் கேள்வி

கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவினர் திங்கட்கிழமையன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசினர். அப்போது தமிழ் முரசு செய்தியாளர் இந்து இளங்கோவன் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்குமாறு நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்கை நோக்கி சுகாதார அமைச்சர் ஓங் யி காங், வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இருவரும் கண் ஜாடை காட்டினர்.

கேள்விக்குப் பதில் சொல்லும் பொறுப்பை இருவரும் அமைச்சர் வோங்கிடம் தள்ளியதாகக் கூறி இணையத்தில் பல ‘மீம்ஸ்’ பதிவேற்றம் செய்யப்பட்டன. இதன் தொடர்பில் ஃபேஸ்புக்கில் திரு வோங் இன்று பதிவிட்டார். அமைச்சர்களின் செயல் குறித்து கேலி செய்திருந்த ஒரு ‘மீம்’ தம் கண்ணில் பட்டதாகவும் தாம் அதைப் பார்த்து சிரித்ததாகவும் திரு வோங் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் கேள்விக்கு யார் பதில் அளிக்கிறார் என்பது முக்கியமில்லை என்றும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதே முக்கியம் என்றும் அமைச்சர் பதிவிட்டார்.

கேள்வியைப் பொறுத்து எந்த அமைச்சர் பதிலளித்தால் சிறப்பாக இருக்கும் என்ற நிலையிலேயே அமைச்சர்கள் செயல்பட்டதாகவும் திரு ஓங் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!