கொவிட்-19 சுயபரிசோதனைக் கருவி: கவலை தெரிவிக்கும் நிபுணர்கள்

கொவிட்-19க்கு எதி­ரான போரில் புதி­தாக உரு­வாக்­கப்­பட்ட சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வி­கள் பய­னுள்­ள­தாக விளங்­கி­னா­லும் கரு­வி­யின் பயன்­பாட்­டில் ஒரு சில அம்­சங்­கள் கவலைக்­கு­ரி­ய­தாக இருப்­ப­தாக கூறு­கின்­ற­னர் நிபு­ணர்­கள்.

சுய­மாக பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தால் அதன் முடி­வு­கள் உட­னுக்­கு­டன் தெரி­விக்­கப்­ப­டா­மல் போக­லாம். இத­னால் கிரு­மித்­தொற்­றால் புதி­தாக பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை குறைத்­துக் கூறப்­ப­ட­லாம்.

அர­சாங்க சுகா­தா­ரக் கட்­ட­மைப்­பு­களில் இத்­த­கைய பரி­சோ­தனை முறை­களை ஒருங்­கி­ணைப்­பது நல்­லது என்று நிபு­ணர் ஒரு­வர் ஆலோ­சனை கூறி­னார்.

தென்­கொ­ரியா, அமெ­ரிக்கா, ஐரோப்பா ஆகி­ய­வற்­றில் ஏற்­கெ­னவே இப்­ப­ரி­சோ­த­னைக் கருவி பயன்­பாட்­டில் உள்­ளது. கூடிய விரை­வில் கருவி இங்­குள்ள மருந்­த­கங்­களில் கிடைக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எளிய முறை­யில் இப்­ப­ரி­சோ­த­னைக் கருவி பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று குறிப்­பிட்ட பிர­த­மர் லீ சியன் லூங், 'பிசி­ஆர்' பரி­சோ­தனை போன்று வேதனை தரு­வ­தாக இருக்­காது என்று கூறி­னார்.

நிகழ்­வுக்கு முன்­னால் அதி­க­ள­வில் பயன்­ப­டுத்­தப்­படும் 'ஏஆர்டி' எனப்­படும் ஏன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை முறை போன்று இந்த சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வி­கள் செயல்­படும். சுமார் 30 நிமி­டங்­களில் முடி­வு­க­ளைத் தெரி­விக்­கும் இக்­க­ருவி, ஒன்­றி­ரண்டு நாட்­களில் முடி­வைத் தெரி­விக்­கும் 'பிசி­ஆர்' பரி­சோ­தனை முறை­யைக் காட்­டி­லும் துல்­லி­யத்­தில் குறைவு.

இந்த சுய­ப­ரி­சோ­த­னைக் கருவி­கள் வீட்­டி­லும் அவ­சர கார­ணத்­துக்­காக வெளி­யி­லும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்­ப­தால் மிகப் பய­னுள்­ளவை என்­றார் தொற்று நோய்­கள் நிபு­ணர் மற்­றும் மருத்­துவ நுண்­ணு­யி­ரி­யல், தொற்­றுக்­கான ஆசிய-பசி­பிக் சங்­கத்­தின் தலை­வ­ரு­மான பால் தம்­பையா.

இருப்­பி­னும், தவ­றான முறை­யில் கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டால் பொய்­யான முடி­வு­களே எஞ்­சும் என்­றார் தொற்று நோய்­கள் மருத்­து­வர் டாக்­டர் லிங் லி மின்.

இதன்­படி, தொற்று இருந்­தும் இல்லை என்று சிலர் நினைத்­துக்­கொள்­ள­லாம் என்­றும் தங்­களை அறி­யா­மலே அவர்­கள் பிற­ருக்­குத் தொற்­றைப் பரப்­ப­லாம் என்­றும் அவர் கூறினார்.

இந்­நி­லை­யில், சுய­ப­ரி­சோ­த­னை­யில் கிரு­மித்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தா­லும் அதைத் தெரி­யப்­ப­டுத்­தா­மல் இருப்­பது ஆபத்து என்­றார் பேரா­சி­ரி­யர் தம்­பையா.

இத்­த­கைய சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வி­களை மருந்­த­கங்­களில் விற்­கும்­போது வாங்­கி­ய­வ­ரின் மருத்­து­வப் பதி­வு­கள் கொண்ட தேசிய சுகா­தார கட்­ட­மைப்­பில் தக­வலை ஒருங்­கி­ணைக்­க­லாம் என்­றார்.

இந்­தி­யா­வில் இதே­போன்ற சுய­ப­ரி­சோ­த­னைக் கருவி பயன்­பாட்­டில் உள்­ளது. அதற்­கான செய­லியை முத­லில் பதி­வி­றக்­கம் செய்ய வேண்­டும். பரி­சோ­தனை முடி­வு­கள் அச்­செ­ய­லி­யில் பதி­வாகும். பின்­னர் மருத்­துவ ஆராய்ச்­சிக்­கான இந்­திய மன்­றத்­திற்கு அறிக்கை வழி பரி­சோ­தனை முடிவு அனுப்­பப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!