ஆசிய தரவரிசையில் முன்னணி இடத்தில் சிங்கப்பூரின் இரண்டு பல்கலைக்கழகங்கள்

ஆசி­யா­வின் சிறந்த பல்­க­லைக்­க­ழ­கங்­கள் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்) மூன்­றா­வது இடத்­தி­லும்; நன்­யாங் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கம் (என்­டியு) ஐந்­தா­வது இடத்­தி­லும் வந்­துள்­ளன.

'டைம்ஸ் உயர் கல்வி'யின் அண்­மைய தர­வ­ரி­சை­யில் சிங்­குவா, பீக்­கிங் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் முறையே முதல், இரண்­டா­வது இடங்­க­ளைப் பிடித்­தன. ஹாங்­காங் பல்­க­லைக்­க­ழ­கம் நான்­கா­வது இடத்­தைத் தக்கவைத்­துக்கொண்­டது.

2020ல் ஆறா­வது இடத்­தி­லி­ருந்த என்­டியு ஐந்­தா­வது இடத்­துக்கு வந்­தது, என்­யு­எஸ் முதல் மூன்று இடங்­களில் தொடர்ந்து உள்­ளது. இரு பல்­க­லைக்­க­ழ­கங்­களும் சென்ற 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து முதல் 10 இடங்­க­ளுக்­குள் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆறா­வது இடத்­தில் தோக்­கியோ பல்­க­லைக்­க­ழ­கம், ஒன்­ப­தா­வது இடத்­தில் சோல் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் 10வது இடத்­தில் கியோட்டோ பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­யவை உள்­ளன. நேற்று வெளி­யி­டப்­பட்ட இந்த ஆண்­டின் தர­வ­ரி­சை­யில் 30 நாடு­க­ளை­யும் வட்­டா­ரங்­க­ளை­யும் சேர்ந்த 551 பல்­க­லைக்­க­ழ­கங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. 2020இல் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்ட 489 பல்­க­லைக்­க­ழ­கங்­கள் இடம்­பெற்­றன.

கற்­பித்­தல் (கற்­றல் சூழல்), ஆய்வு (அளவு, வரு­மா­னம், மதிப்பு), மேற்­கோள்­கள் (ஆய்வு பாதிப்பு), அனைத்­து­லக பார்வை (ஊழி­யர்­கள், மாண­வர்­கள், ஆய்வு), தொழில்­துறை வரு­மா­னம் (அறிவு பரி­மாற்­றம்) ஆகிய ஐந்து பிரி­வு­க­ளா­கத் தொகுக்­கப்­பட்ட 13 செயல்­தி­றன் குறி­காட்­டி­க­ளின் அடிப்­ப­டை­யில் பல்­க­லைக்­க­ழ­கங்­களை 'டைம்ஸ் உயர் கல்வி' மதிப்­பீடு செய்­தது.

பங்­கேற்­கும் பல்­க­லைக்­க­ழ­கங்­ க­ளின் எண்­ணிக்கை கூடிவரு­வது இந்த வட்­டா­ரத்­தில் வளர்ந்து வரும் போட்­டித்­தன்­மையை எடுத்­துக்­காட்­டு­கிறது என்றார் 'டைம்ஸ் உயர் கல்வி' பதிப்­பின் தலைமை அறிவு அதி­காரி திரு பில் பாட்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!