அதிபர் ஹலிமா வலியுறுத்து: மாதர் மேம்பாட்டுக்கு முழு சமூகமும் சேர்ந்து முயல வேண்டும்

சமூக நியதிகளும் நடைமுறைகளும் மாறி மாதர்களுக்கு இன்னும் சிறந்த ஆதரவு கிடைக்க சமூகம் முழுமையும் சேர்ந்து முயலவேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தினார்.

ஆண்- பெண் இருபாலருக்கும் இடையில் சமத்துவம் பற்றிய மாநாட்டில் அதிபர் உரையாற்றினார்.

இதில் மாதர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமையைக் கொடுப்பதோடு பிரச்சினை முடிந்துவிடாது என்ற அதிபர், பெண்கள் ஆற்றும் தொண்டுக்கும் அவர்களின் தியாகத்திற்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாம் எல்லாருமே இவற்றைச் செய்யக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடிகின்ற, முழு அறிவாற்றலை வெளிப்படுத்த முடிகின்ற ஒரு சமூகத்தை நாம் ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

சிங்கப்பூரின் முதல் பெண் நாடாளுமன்ற நாயகராக இருந்து பின்னர் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரான திருவாட்டி ஹலிமா, கொள்கை ஆய்வுக் கழகத்தின் மாதர் மாநாடு 21ல் காணொளி மூலம் உரையாற்றினார்.

அந்த மெய்நிகர் கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள், அரசாங்க பிரமுகர்கள் என 250 பேர் கலந்துகொண்டு மாறிவரும் உலகில் சிங்கப்பூர் மாதர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தனர்.

சிங்கப்பூரில் மாதர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி தேசிய அளவில் மறுபரிசீலனை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் மாதர்கள் மேம்பாடு பற்றிய கலந்துரையாடல் தொடர் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய மெய்நிகர் மாநாடு இடம்பெற்றது. ஆண் பெண் சமத்துவத்தை எப்படி சாதிப்பது என்பது பற்றிய எல்லா கண்ணோட்டங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் பரிந்துரைகளும் அவற்றை அமலாக்க உதவும் வழிகாட்டி திட்டமும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை அரசாங்கம் தாக்கல் செய்யும் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

ஆண் பெண் சமத்துவம் என்று வரும்போது, மாறிவரும் போக்குகள், சவால்கள் ஆகியவற்றைச் சமாளிக்கும் வகையில் இப்போதைய கொள்கைகளையும் சமூக நியதிகளையும் மறுபரிசீலனை செய்வது முக்கியமானது என்றார் அதிபர்.

இதைப் பொறுத்தவரை அரசாங்கம் தன் கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் தொடர்ந்து மறுபரிசீலனை செய்து வருவதை அதிபர் சுட்டினார்.

மாதர் முன்னேற்றம் பற்றி குறிப்பட்ட அதிபர், குறிப்பாக கல்வி, வேலை, சமூகம், பங்களிப்பு ஆகிய துறைகளில் மாதர்கள் சாதித்து இருப்பதாகக் கூறினார்.

அதேவேளையில் முன்னேற்றம் என்பது தொடர்ந்து இடம்பெறும் ஒன்று என்பதால் மாதர்கள் மேலும் மேலும் மேம்பட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்தார்.

வீடுகளில் இன்னும் பொறுப்பு களை மேற்கொண்டு தீவிரமாக செயல்படும்படி தந்தையர்களை அவர் வலியுறுத்தினார்.

மேலும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளும்படி முதலாளிகளை அதிபர் கேட்டுக்கொண்டார்.

மாதர்கள் பல சவால்களை எதிர்நோக்கும் மற்றொரு துறை மின்னிலக்கம் என்று கூறிய திருவாட்டி ஹலிமா, மின்னிலக்க யுகத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறக்கூடிய அலைக்கழிப்பு, பாலியல் தொல்லைகள் போன்ற செயல்களுக்கு எதிராக சிங்கப்பூரர்கள் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

பெண்கள் ஆண்களுக்குச் சரிசமமானவர்கள், அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பதை இளம் வயதிலேயே ஆண்களுக்குப் போதிக்க வேண்டும் என்றார் அதிபர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!