ஹவ்காங்வாசிகளுக்கு இரு வாரங்களில் 2வது பரிசோதனை

ஹவ்­காங் அவென்யூ 8ல் உள்ள 506வது புளோக்­கில் அமைக்­கப்­பட்ட தற்­கா­லிக நிலை­யத்­தில் நேற்று குடி­யி­ருப்­பா­ளர்­கள், கடைக்­கா­ரர்­கள் பல­ரும் கட்­டாய கொரோனா பரி­சோ­த­னைக்­காக வரி­சை பிடித்து நின்­ற­னர்.

அந்­தப் புளோக்­கில் குடி­யி­ருப்­போ­ருக்­கும் பக்­கத்­தில் வேலை பார்ப்­போ­ருக்­கும் பெரிய அள­வில் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அரு­கில் இருக்­கும் ஏழு புளோக்­கு­களில் வசிப்­போ­ரும் தாங்­க­ளா­கவே பரி­சோ­த­னைக்கு வந்­த­னர்.

அந்­தப் பகு­தி­யில் கொவிட்-19 தலை­காட்டி இருப்­பதே இதற்­குக் கார­ணம். சிங்­கப்­பூ­ரில் சமூ­கத்­தில் தொற்று கூடி இருக்­கிறது.

கூடி­ய­வரை அதி­க­மா­ன­வர்­களுக்­குப் பரி­சோ­னை­களை நடத்தி தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த முயற்­சி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டு உள்­ளன.

தட­ம­றி­தல், தடுப்­பூசி, பரி­சோ­தனை ஆகிய மூன்று உத்­தி­க­ளு­டன் கொரோனா தொற்று கட்­டுப்­படுத்­தப்­பட்டு வரு­கிறது.

புளோக் 506ல் வசிப்­போ­ருக்­கும் பக்­கத்­தில் இருக்­கும் ஏழு புளோக்கு­களில் உள்ள கடை­களில் வேலை பார்க்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் கட்­டாய பரி­சோ­தனை பற்றி கடந்த வியா­ழக்­கி­ழமை சுகா­தார அமைச்சு அறி­வித்து இருந்­தது.

புளோக் 506 குடி­யி­ருப்­பா­ளர்­களைப் பொறுத்த வரை நேற்று நடந்த பரி­சோ­தனை இரண்டு வாரங்­களில் அவர்­கள் செய்­து­கொண்ட இரண்டாவது பரிசோ­தனை ஆகும்.

அவர்­க­ளுக்­குக் கடந்த மே மாதம் 21 மற்­றும் 22ஆம் தேதி­களில் கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

ஹவ்­காங் அவென்யூ 8ல் உள்ள புளோக் 506ல் வசிக்­கும் ஒரு சில­ருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக அந்த புளோக்­கில் வசிக்­கும் அனை­வ­ருக்­கும் கட்­டாய பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்­றும் அமைச்சு மே 20ஆம் தேதி அறி­வித்து இருந்­தது.

அந்­தப் புளோக் தொடர்­பான ஒரு புதிய தொற்றுக் குழு­மம் பற்றி அறி­வித்த அமைச்சு, அந்­தக் குழு­மத்­தில் 13 பேரை கிருமி தொற்றி இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தது.

பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும்­படி பக்­கத்­தில் உள்ள புளோக்கு களைச் சேர்ந்­த­வர்­களும் ஊக்கு­விக்­கப்­பட்­ட­னர். அதனை அடுத்து நேற்று காலையிலேயே வரிசையில் பலரும் காத்திருந்தனர்.

கட்டாய கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்ட குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!