2020ல் குறைவான கண்காணிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன

கண்­கா­ணிப்பு ஆணை 2020ஆம் ஆண்­டில் குறைந்த எண்­ணிக்­கை­யில் பிறப்­பிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டுள்ளது. கிருமி முறி­ய­டிப்பு காலத்­தின்­போது அவ­ச­ர­மில்­லாத வழக்­கு­களை நீதி­மன்­றங்­கள் தள்ளி­வைத்­த­தன் பிர­தி­ப­ல­னாக இது இருக்­க­லாம் என்று கூறப்­படு­கிறது.

மொத்­தம் 428 கண்­கா­ணிப்பு ஆணை­கள் சென்ற ஆண்டு பிறப்­பிக்­கப்­பட்­டன. 2019ல் பிறப்­பிக்­கப்­பட்ட 538 ஆணை­க­ளைக் காட்டி­லும் இது சுமார் 20% குறை­வாகும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அதன் 'கண்­கா­ணிப்பு மற்­றும் சமூக மறு­வாழ்­வுச் சேவை 2020' வரு­டாந்­திர அறிக்­கை­யில் இவ்­வி­வ­ரங்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

ஒரு­வ­ருக்­குக் கண்­கா­ணிப்பு ஆணை பிறப்பிக்­கப்­ப­டும்­போது அதி­கா­ரி­யின் மேற்­பார்­வை­யில் சமூக மறு­வாழ்வு தண்­ட­னையை நிறை­வேற்ற வேண்­டும். இதற்­கான காலம் ஆறு மாதம் முதல் மூன்று ஆண்­டு­கள் வரை நீடிக்­க­லாம்.

கண்­கா­ணிப்பு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டோ­ரில் ஏழு விழுக்­காட்­டி­னர் மட்­டுமே, தங்­க­ளின் தண்­ட­னைக் காலத்தை விடுதி ஒன்­றில் தங்கி நிறை­வேற்­று­வ­தாக இருந்­தது. எஞ்­சி­யோர் தங்­க­ளின் வீட்­டி­லேயே கண்­கா­ணிப்பு ஆணையை நிறை­வேற்­றி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அதி­க­மான ஆத­ர­வும் கண்­கா­ணிப்­பும் தேவைப்­படும் நிலை­யில் உள்ள குற்­ற­வா­ளி­களே விடுதி­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­வர்.

கண்­கா­ணிப்பு ஆணையை கடந்த ஆண்டு நிறை­வேற்­றத் தொடங்­கி­ய­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதி பேர் 18க்கும் 20க்கும் இடைப்­பட்ட வய­து­டை­ய­வர் என்று கூறப்­பட்­டது. சென்ற ஆண்டு 82% கண்­கா­ணிப்பு ஆணை­கள் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!