‘மின் துறை ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்’

சேலம்: கொரோ­னா­வில் இருந்து தற்­போதுதான் தமி­ழ­கம் மெல்ல மெல்ல மீண்டு வரு­கிறது. இன்­னும் சிறிது காலத்­தில் இயல்பு நிலைக்­குத் திரும்­பியவுடன், கடந்த ஆட்சி­யின்­போது மின்­சா­ரத்­து­றை­யில் நடந்த ஊழல்­கள் வெளிச்­சத்­துக்கு கெண்டுவரப்­படும் என்று மின்சாரம், மது­வி­லக்கு ஆயத்­தீர்வை துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

முன்­னாள் அமைச்­சர் தங்­க­மணி கடந்த அதி­முக ஆட்­சி­யின்போது மின்சாரத் துறை அமைச்­ச­ராக இருந்தவர். அவரை குறி­வைத்தே செந்தில் பாலாஜி ஊழல் புகாரை பட்டியலிட உள்ளதாக ஊட­கத் தகவல்­கள் குறிப்பிட்டுள்­ளன.

சேலம் மாவட்­டத்­தில் கிருமித் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து அனைத்து துறை அதி­காரிகளு­ட­னும் ஆலோ­சனை நடத்­திய பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்சர் பேசி­னார்.

"சேலம் இரும்பு ஆலை­யில் ஒரு வாரத்தில் 500 படுக்­கை­கள் தயார் செய்­யப்­பட உள்ளன. தவ­றான பரி­சோ­தனை முடி­வு­களை அளித்து வந்த இரு தனி­யார் ஆய்­வ­கங்­க­ளுக்கு 'சீல்' வைக்­கப்­பட்­டுள்­ளது," எனக்­கூ­றிய அவர், முந்­தைய ஆட்சி­யா­ளர்­கள் முறையாக மின்­ ப­ரா­மரிப்புப் பணி­களைச் செய்­ய­வில்லை என்றும் குற்­றம்சாட்­டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!