செய்திக்கொத்து

பல்வேறு மோசடிகள் தொடர்பில் 294 பேரிடம் விசாரணை

பல்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 294 பேரை போலிஸ் விசாரித்து வருகிறது. மொத்தம் 534 மோசடி சம்பவங்கள் பற்றி விசாரிக்கப்படுகின்றன.

அந்த மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஏறத்தாழ $7 மில்லியன் இழந்துவிட்டனர். விசாரிக்கப்பட்டு வரும் சந்தேகப்பேர்வழிகளில் 193 பேர் ஆண்கள். 101 பேர் பெண்கள். அவர்களுக்கு வயது 16 முதல் 74 வரை என்று போலிஸ் அறிக்கையில் தெரிவித்தது.

ஏமாற்றியது, கள்ளத்தளமாக பணம் அனுப்பியது, உரிமம் இல்லாமல் பணப்பட்டுவாடா சேவைகளில் ஈடு பட்டது முதலான சட்டவிரோத காரியங்களில் சந்தேகப் பேர்வழிகள் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இணையக் காதல், இணைய வர்த்தகம், அரசாங்க அதிகாரிகள் போல், சீன அதிகாரிகள் போல் நடித்தது, போலியான முதலீடு, கேளிக்கை, சூதாட்டம், கடன் ஆகிய இணையத்தளங்கள் மூலம் அவர்கள் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு தரை போலிஸ் பிரிவு அதிகாரிகளும் மே 22 ஆம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமைவரை மேற்கொண்ட இரண்டு வார நடவடிக்கைகளில் சந்தேகப் பேர்வழிகள் சிக்கினர்.

சிறார்கள் சிங்கப்பூர் வரலாறு கற்க உதவும் புதிய கல்விச் சாதனங்கள்

சிங்கப்பூரின் வரலாறு, கலாசாரம் பற்றி சிறார்கள் கற்றுக் கொள்ள உதவும் புதிய கல்விச் சாதனங்கள் (படம்) உருவாக்கப்பட்டு உள்ளன. சிறாரின் வரலாற்று, கலாசார அறிவைப் பெருக்க பெற்றோரும் கல்வியாளர்களும் இவற்றை நாடலாம்.

சமூக, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஸுலிங் நேற்று இவற்றை வெளியிட்டார்.

'புத்தாக்க கலந்துறவாடல்: எதிர்காலத்திற்கு உரு கொடுப்போம்' என்ற இந்தச் சாதனங்கள் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரு சிறுமி, அவரின் தொல்லியல் துறை அறிஞர் ஒருவருடன் சென்று அந்தக் கால குடியேறிகளைச் சந்தித்து கலந்துறவாடுவது போன்ற இருவழி தொடர்பு வடிவிலான கதை, செய்முறைப் பயிற்சி அட்டை, சிங்கப்பூர் வரைபடம், ஓவியச் சாதனங்கள், தகவல் ஏடுகள் எல்லாம் இவற்றில் அடங்கும். பெற்றோரும் சிறார் கல்வித்துறை யினரும் இவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாலர் பள்ளிகளுக்கும் இவை விநியோகிக்கப்படும்.

சமூகத்தில் புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் வாக்­கில் புதி­தாக 18 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­ட­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் 13 பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள். இவர்­கள் அனைவரும் முன்பு கிருமி தொற்­றிய நோயாளி­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். இவர்­கள் ஏற்கெனவே தனி­மைப்­படுத்­தப்­பட்டு இருந்­த­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு கூறியது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஐந்து பேருக்­குத் தொற்று உறு­தி­யா­ன­தால் அவர்­க­ளுக்­குத் தனிமை உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. இங்கு வந்­த­வர்­களில் மூவர் குடி­மக்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­களில் நேற்று புதிதாக யாருக்­கும் தொற்று இல்லை என்றும் அமைச்சு தெரிவித்தது. புதிதாக கிருமி தொற்றியோரையும் சேர்த்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,176 ஆகக் கூடியது. வெள்ளிக்கிழமையன்று புதிதாக ஏழு பேருக்குச் சமூகத்தொற்று ஏற்பட்டது. மே 10ஆம் தேதிக்குப் பிறகு புதிதாக சமூகத் தொற்றுக்கு ஆளானவர்களின் அன்றாட எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமைதான் அந்த அளவுக்கு ஆகக்குறைவாக இருந்தது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­களில் வெள்ளிக்கிழமையும் புதி­தாக யாருக்­கும் தொற்று இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!