முகக்கவசம் அணிய மறுத்த மாதுக்கு பிணை

மரினா பே சேண்ட்ஸ் (எம்­பி­எஸ்) ஒருங்­கி­ணைந்த உல்­லா­சத்­த­ளத்­தில் முகக்­க­வ­சம் அணிய மறுத்த 53 வய­தான ஃபூன் சியு யோக்­கிற்கு, $8,000 பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. காணொளி பதிவு மூலம் இவர் முகக்­க­வ­சம் அணிய மறுத்த சம்­ப­வம் தெரி­ய­வந்­தது. இவர் இரு வாரங்­கள் மன­ந­லக் கழ­கத்­தில் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

எம்­பி­எஸ், நியூட்­டன் உண­வங்­காடி நிலை­யம், கிளார்க் கீ சென்ட்­ரல், பிராஸ் பசா காம்பி­ளக்ஸ், அரசு நீதி­மன்ற கட்­ட­டத்­தின் வெளிப்­ப­குதி ஆகிய இடங்­களில் முகக்­க­வ­சம் அணிய தவ­றி­யது என அவர் ஏழு குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­கி­றார்.

தாம் ஒரு கடற்­படை அதி­காரி என்­றும் நிபு­ணர்­கள் மத்­தி­யில் தமக்கு தனி மரி­யாதை உண்டு என்றும் நேற்று நான்கு முறை நீதி­மன்­றத்­தில் ஃபூன் கூறி­னார், மேலும் தம் மீதான குற்­றச்­சாட்­டு­களை கைவி­டு­மா­றும் கேட்­டுக்­கொண்­டார்.

"சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்ல, உல­க­ள­வில் எனக்கு தனி மரி­யாதை உண்டு. நான் 12 ஆண்டு­கள் கடற்­ப­டை­யில் பணி­யாற்­றி­னேன், முதல் பெண் ஆணைபெற்ற அதி­கா­ரி­யாக இருந்­தேன்," என்று அவர் கூறி­னார்.

விசா­ரணை அதி­கா­ரி­க­ளின் தரப்­பில் "நடை­முறை பிழை­கள்" இருப்­ப­தா­க­வும் கைதாணை இல்லா­மல் தாம் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர் குற்­றம் சாட்­டி­னார்.

கடற்­ப­டை­யின் முதல் பெண் ஆணைபெற்ற அதி­கா­ரி­யாக சிங்­கப்பூ­ருக்கு "ஒரு முன்­னோ­டி­யாக" பங்­காற்றியுள்­ள­தால், வேறொ­ரு­வர் உத்­த­ர­வா­த­மின்றி தமக்கு $3,000 பிணை வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் ஃபூன் கேட்­டார்.

தற்­போ­தைய கொவிட்-19 விதி­மு­றை­க­ளுக்கு கட்­டுப்­பட்டு நடப்­ப­து­டன் மீண்­டும் குற்­றம் புரி­யக்­கூ­டாது என்ற கட்­டுப்­பாட்­டு­டன் அவ­ருக்கு $10,000 பிணை நிர்­ண­யிக்­கப்­பட வேண்­டும் என்று அரசு தரப்பு கேட்­டுக்­கொண்­டது.

ஃபூன் மேலும் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்­ளக்­கூ­டும் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!