3.7 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதில் 157 கடுமையான பாதிப்புச் சம்பவங்கள்

கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் சிங்­கப்­பூ­ரில் இது­வரை 3.7 மில்­லி­யன் முறை போடப்­பட்­டுள்ள நிலை­யில், உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கும் அல்­லது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­படும் அள­வுக்கு ஏற்­பட்ட கடும்­ பா­திப்­புச் சம்­ப­வங்­கள் 157 என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி தொடர்­பில் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் என்ற சந்­தே­கத்­திற்கு இட­மி­ருந்­தா­லும் கொவிட்-19 தடுப்­பூ­சிக்­கும் உயி­ரி­ழப்­புக்­கும் தொடர்­பே­தும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என்­றது ஆணை­யம்.

மே 23 நில­வ­ரப்­படி, சிங்­கப்­பூரில் போடப்­பட்ட 'ஃபைசர்-பயோ­என்­டெக்' மற்­றும் 'மொடர்னா' தடுப்­பூ­சி­களில் இந்­தக் கடும்­ பாதிப்­புச் சம்­ப­வங்­கள் 0.004% என்று கூறப்­பட்­டது.

தடுப்­பூசி தொடர்­பில் இந்தப்­பாதிப்பு­கள் ஏற்­பட்­டி­ருந்­தா­லும் தடுப்­பூ­சி­தான் கார­ணம் என்று கூறி­விட முடி­யாது.

இது­வரை கடும்­ பா­திப்­புக்கு ஆளா­ன­வர்­கள் அதி­லி­ருந்து மீண்டு வந்­து­விட்­ட­னர் அல்­லது குண­ம­டைந்து வரு­வ­தா­க­வும் ஆணை­யம் தெரி­வித்­தது.

கடுமை அல்­லாத பாதிப்­பு­க­ளை­யும் சேர்த்து ஆணை­யத்­திற்கு 4,704 அறிக்­கை­கள் வந்­துள்­ளன. தோலில் அரிப்பே பெரும்­பா­லும் ஏற்­பட்ட பாதிப்­பாக இருந்­தது.

இதை­ய­டுத்து சிலருக்குக் கண் இமை, முகம் அல்­லது உத­டு­களில் வீக்­கம் ஏற்­பட்­டும் உள்­ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!