பாதுகாப்பின்றி லாரியில் ஊழியர்கள் பயணம் (காணொளி உள்ளே)

இன்று காலை பாதுகாப்பு இல்லாமல் லாரியின் பின்புறம் பயணித்த சில ஆடவர்களின் காணொளி ஒன்றை தமிழ் முரசு வாசகர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

'கரணம் தப்பினால் மரணம்' எனும் நிலையில் அந்த இருவரும் லாரியில் பயணித்தது காணொளியில் தெரிந்தது.

கொவிட்-19 தொடங்கியது முதல் ஊழியர்களின் நலனுக்கான வசதிகள் குறித்து பல சர்ச்சைகள் கிளம்பின. அவ்வரிசையில் ஊழியர்களின் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த சர்ச்சையும் அண்மையில் நிலவி வந்தது. இப்பிரச்சினை பற்றிய விவாதம் நாடளுமன்றத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி இடம்பெற்றது.

இந்நிலையில் இன்று (திங்கள்) காலை மணி 11.25 அளவில் வெள்ளை நிற ‘நிசான்’ லாரி ஒன்றில் இரண்டு ஆடவர்கள் லாரியின் பின் பகுதியில் பாதுகாப்பு வசதி எதுவும் இல்லாமல் உட்கார்ந்து சென்றுள்ளனர்.

அந்த ஆடவர்கள் அந்த நிறுவனத்தின் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்றும் காணொளியை அனுப்பிய முரசு வாசகர் கூறினார்.

ஊட்ரம் பார்க் நோக்கி செல்லும் ‘சிடிஇ’ சுரங்கப்பாதையில் இருந்தபோது திறன்பேசியில் இந்த காணொளியைப் பதிவு செய்தார் கட்டுமானத் துறை ஊழியர் திரு பிரம்மதேவன் செல்லையா,33.

வேலை காரணத்திற்காக தெம்பனீஸ் முதல் அலெக்ஸாண்டரா வரைப் பயணம் சென்றபோது இந்த லாரியைப் பார்த்தார் அவர்.

“கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் லாரி போய் கொண்டிருக்கும். சாலைகளில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. தீடீரென்று லாரியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது இந்த ஊழியர்களுக்கு என்ன ஆகும்,” என்றார் திரு பிரம்மதேவன்.

லாரியின் பின் பகுதியில் சில அலமாரி பெட்டிகள் உள்ளன. அலமாரி பெட்டி ஒன்றுக்குள் உட்கார்ந்து அதைப் கட்டியாக பிடித்தவாறு ஒருவரும் பெட்டிக்கு வெளியே ஒருவரும் உட்கார்ந்து தலை மீது துணி வைத்து முகத்தை மறைப்பதும் காணொளியில் தெரிகிறது.

லாரியின் முன் பகுதி காணொயில் தெரியவில்லை. ஆனால் அங்கு ஒரு ஓட்டுநரும் ஓட்டுநருக்கு அருகே ஒருவர் உட்கார்ந்திருப்பதும் தெரிந்தது என்று நினைவுக்கூர்ந்தார் பிரம்மதேவன்.

“ ஊழியர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது என்று நினைக்கிறேன். பொதுவாக முதலாளி சொல் பேச்சை தட்டாமல் நடக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பார்கள். பாதுகாப்பு இல்லை என்றாலும் அப்படித் தான் அவர்களால் பயணம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருந்திருக்கலாம்,” என்றார் பிரம்மதேவன்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வெளிநாட்டு ஊழியர்களை ஏந்தி சென்ற இரண்டு லாரி விபத்துகள் நிகழ்ந்தன. இவ்விரு சம்பவங்களில் மொத்தம் 20க்கும் மேற்பட்டோர் காயமுற்றும் இரண்டு பேர் இறந்தும் உள்ளனர்.

இச்சம்பவங்களை அடுத்து பார வண்டி (truck), லாரி ஆகிய வாகனங்களை வெளிநாட்டு ஊழியர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் மற்ற வகையான போக்குவரத்து வசதிகளை விரைவான காலக்கட்டத்திற்குள் அமலாக்கம் செய்வதற்கு பங்காளிகளுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறினார் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் துணைச் செயலாளர் திரு மெல்வின் யோங்.

இக்கருத்துகள் இணைய பதிவு மூலம் மக்களுக்கு கடந்த மாதம் பகிரப்பட்டன.

“நம் வெளிநாட்டு ஊழியர்களின் போக்குவரத்துக்கு ஒரு நல்ல, நிலையான மாற்று வழி உண்டு. இருக்கை வார் (seat belts) கொண்ட பேருந்துகள்,” என்றார் திரு யோங்.

இது குறித்து மனிதவள அமைச்சுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இதுபோன்ற உங்கள் செய்தி பற்றி எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றால் எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இணைந்து செய்தி அனுப்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!