நியாயமான தடுப்பூசிப் பங்கீடு: அமைச்சர் விவியன் வலியுறுத்து

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பி­லும் தடுப்­பூசிப் பங்­கீட்­டி­லும் உல­க­ளா­விய ஒத்­து­ழைப்பு தேவைப்­ப­டு­வதை கொவிட்-19 நோய்ப் பர­வல் எடுத்­துக்­காட்டி இருக்­கிறது என்­றும் நியா­ய­மான, நடு­நி­லை­யு­டன் கூடிய தடுப்­பூ­சிப் பங்­கீட்­டில் சிங்­கப்­பூர் நம்­பிக்கை கொண்­டுள்­ளது என்றும் வெளி­யுறவு அமைச்­சர் விவியன் பால­கிருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யி தலை­மை­யில் காணொளி வழி­யாக இடம்­பெற்ற ஆசிய, பசி­பிக் உயர்­நி­லைக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போது டாக்­டர் விவி­யன் இவ்­வாறு கூறி­னார்.

அனைத்­து­லக ஒத்­து­ழைப்பு மூலம் கொரோனா பர­வ­லை­யும் எதிர்­கால உலக சுகா­தார அச்­சு­றுத்­தல்­க­ளை­யும் எதிர்­கொள்­வ­தில் சிங்­கப்­பூர் கடப்­பாடு கொண்­டுள்­ளதை அமைச்­சர் விவி­யன் உறுதி­யா­கக் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன், கொரோனா பர­வலில் இருந்து உல­கம் முழு­தும் மீள நியா­ய­மான தடுப்­பூ­சிப் பங்­கீடு முக்­கி­யம் என்­றும் அவர் சொன்­னார்.

பாது­காப்­பான பய­ணத்தை மீண்­டும் தொடங்க ஏது­வாக, சுகா­தா­ரச் சான்­றி­தழ்­களை ஒன்­றுக்­கொன்று அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் சீனா உள்­ளிட்ட பல நாடு­களு­டன் சிங்­கப்­பூர் பேச்­சு­வார்த்­தை­யைத் தொடங்கி இருப்­ப­தா­க­வும் அது தாக்­குப்­பி­டிக்­கத்­தக்க பொரு­ளி­யல் மீட்­சிக்கு அவ­சி­யம் என்­றும் டாக்­டர் விவி­யன் பேசி­னார்.

மேம்­பட்ட பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்­பும் தொடர்­பும் முக்­கி­யம் எனக் குறிப்­பிட்ட அவர், அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள், மருந்­துப் பொருள்­க­ளின் தொடர்ச்­சி­யான விநி­யோ­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வதற்கு நிலைத்த, மீட்­சித்­தன்­மை­மிக்க விநி­யோ­கச் சங்­கி­லி­கள் அவ­சி­யம் என்­றும் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!