சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு உத்திகள்: புதிய உலக ஆலோசனைக் குழு உதவும்

இயற்கை வளங்களைக் கட்டிக்காப்பதற்கான உள்கட்டமைப்பு வசதி உத்திகள் பற்றி புதிய அனைத்துலகக் குழு ஒன்று சிங்கப்பூருக்கு ஆலோசனை வழங்கவிருக்கிறது.

அனைத்துலக வல்லுநர்கள் அடங்கிய அந்தக் குழுவை சிங்கப்பூர் அமைத்து இருக்கிறது. சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு வசதிகளைக் காப்பதில் ஆகப் புதிய போக்குகள் பற்றியும் தலைசிறந்த நடைமுறைகள் குறித்தும் அந்தக் குழு ஆலோசனைகளை வழங்கும்.

தனியார் துறைக்கான முதலீட்டு வாய்ப்புகளையும் அது அடையாளம் காணும் என்று நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று தெரிவித்தார்.

குழு உறுப்பினர்களின் பரந்த அனுபவம், அவர்கள் கொண்டிருக்கும் உலகக் கண்ணோட்டம் ஆகியவை காரணமாக நம்முடைய உத்திகளைச் சீரமைக்கவும் பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவும் புதுப்புது யோசனைகளை அமல்படுத்தவும் நமக்கு உதவி கிடைக்கும் என்று குமாரி இந்திராணி கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

'புதிய ஆசிய சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பு வசதி ஆலோசனைக் குழு' என்ற அந்தக் குழு பற்றி பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி விளக்கினார்.

அந்தக் குழுவுக்கு அவரே தலைமை வகிக்கிறார். புதிய குழு புதன்கிழமை நடந்த ஆசிய உள்கட்டமைப்பு வசதி கருத்தரங்கில் தொடங்கப்பட்டது.

பூமலையில் நேற்று அந்தக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் அமைச்சரை சந்தித்தனர். உலகச் சுற்றுச்சூழல் சந்தை மதிப்பு சென்ற ஆண்டு US$1.7 டிரிலியன் ஆக இருந்தது. அதில் 80 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த சந்தைகளிலேயே ஒருமித்த கவனத்தைச் செலுத்தியது.

இது பற்றி கருத்து கூறிய ககன்ஹெம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான ஸ்கூட் மினர்ட், காலப்போக்கில் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சி ஏற்படும் என்றும் சிங்கப்பூர், ஹாங்காங், தோக்கியோ போன்ற நிதி மையங்களில் அந்தப் பரிணாமம் இடம்பெறும் என்றும் தான் கருதுவதாக கூறினார். இதில் சிங்கப்பூருக்கு ஒரு பங்கு இருக்கிறது என்றார் அவர்.

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனங்கள் உந்து சக்தியாக இருந்து இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நிதி திரட்டக்கூடிய ஒரு மையமாக சிங்கப்பூர் திகழ முடியும் என்றாரவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!