கோரிக்கை ஒருதலைப்பட்சமானது

சிங்கப்பூர் இளையர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் குழு விடுத்துள்ள கோரிக்கை ஒருதலைப்பட்சமானது என்று கொவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழுவும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் மூத்த நோய்த்தொற்றியல் நிபுணரும் கருத்துரைத்துள்ளனர்.

அமெரிக்காவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாள்களுக்குப் பிறகு 13 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததைச் சுட்டி, அந்த மருத்துவர்கள் குழு, திறந்த மடலஃை பேஸ்புக்கில் கடந்த சனிக்கிழமை பதிவிட்டிருந்தது.

அந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையமும் மற்ற நாடுகளில் உள்ள அமைப்புகளும் ஏற்கத்தக்க தரவுகளை முன்வைக்கும் வரை சிங்கப்பூரில் இளையர்களுக்குத் தடுப்பூசி போடுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று அக்கடிதத்தின் வாயிலாக மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அச்சிறுவன் இதயம் செயலிழந்து போனதால் உயிரிழந்ததாக அமெரிக்கா குறிப்பிடவில்லை என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

"அவ்விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்," என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் அபாயங்களைவிட அதனால் கிட்டும் பயன்களே அதிகம் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் முடிவுக்கு வந்திருப்பதை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

"கடுமையான கொவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தவல்ல உருமாறிய 'டெல்டா' கிருமி அதிகமாகப் பரவி வரும் வேளையில், தீவிர கொரோனா பாதிப்பில் இருந்து நம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்," என்றும் அமைச்சு தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

"ஒருமுறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது 'டெல்டா' கிருமியிடம் இருந்து 33% பாதுகாப்பை வழங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இருமுறையும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்," என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடிதத்தை எழுதிய மருத்துவர்கள் கொவிட்-19 தடுப்பூசி குறித்துப் பொதுமக்களுக்குத் தவறான தகவல்களை வழங்கி, தவறாக வழிநடத்திச் செல்கின்றனர் என்று தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் இணைப் பேராசிரியர் டேவிட் லாய் கூறியுள்ளார்.

அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள மருத்துவர்கள், பெரும்பான்மை மருத்துவர்களைப் பிரதிநிதிக்கவில்லை என்ற பேராசிரியர் லாய், அவர்கள் 'எம்ஆர்என்ஏ' வகை கொரோனா தடுப்பூசிகளைப் போடுவதை நிறுத்த வேண்டும் எனத் திரும்ப திரும்பக் கோருவதன் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தைப் பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

"பதின்ம வயதினர் மற்றும் இளம் வயதினருக்குப் போடப்படும் தடுப்பூசியால் ஏற்படும் தீமைகளைவிட நன்மைகளே அதிகம் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 'மையோகார்டிட்டிஸ்' எனும் இதயத்தில் ஏற்படும் சிறிய கோளாற்றின் நீண்டகால விளைவுகளை நிபுணர் குழு அணுக்கமாகத் தொடர்ந்து கண்காணித்து வரும்," என்றும் பேராசிரியர் லாய் கூறினார்.

இளையர்களுக்குத் தடுப்பூசி போடுவதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் குரல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!