‘ஒன்­சர்­வீஸ்’ சேவை வழங்­கு­நர் தர­வுத்­த­ளம் ஊடு­ரு­வப்­பட்­டது

நக­ராட்சி சேவை­கள் அலு­வ­ல­கத்­தின் சேவை வழங்­கு­ந­ரான 'எப்டிட்யுட்' நிறு­வ­னத்­தின் தர­வுத்­த­ளம் இணைய ஊடு­ரு­வ­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், 'ஒன்­சர்­வீஸ்' செய­லிக்­கும் அதைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கும் எவ்­விதப் பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள் ஊடு­ரு­வப்­பட்ட தர­வுத்­த­ளங்­களில் சேக­ரிக்­கப்­ப­ட­வில்லை என்று நக­ராட்சி சேவை­கள் அலு­வ­ல­கம் கூறி­யது.

'எப்டிட்யுட்' நிறு­வ­னத்­தின் தர­வுத்­த­ளங்­கள் ஊடு­ரு­வப்­பட்­டது குறித்து இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று தக­வல் கிடைத்­த­தாக நக­ராட்சி சேவை­கள் அலு­வ­ல­கத்­தி­டம் தெரி­வித்­தது.

ஒன்­சர்­வீஸ் செய­லிக்­கான push அறி­விப்பு முறைக்­கான முக்­கிய இணைப்பை ஊடு­ரு­வல்­கா­ரர்­கள் நீக்­கி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது

செய­லிக்­கான 'புஷ்' அறி­விப்பு முறை உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­ட­தாக அலு­வ­ல­கம் கூறி­யது. பாது­காப்பை வலுப்­ப­டுத்த கூடு­தல் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

செய­லி­யின் பாது­காப்பை உறுதி செய்ய மேலும் பல முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தர­வுத்­த­ளங்­கள் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­படும் என்­றும் அலு­வ­ல­கம் கூறி­யது.

இணைய ஊடு­ரு­வல் குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!