கடல்நீரை குடிநீராக்கும் முறை மூலம் மின்சக்தி

கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் நடை­முறை மூலம் எரி­சக்­தி­யை­யும் தயா­ரிக்­க­லாம் என்­பது ஒரு புதிய ஆய்வு மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வமைப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஒரு குழு, கடல்­நீரை குடி­நீ­ராக்­கும் பேட்­டரி ஒன்றை உரு­வாக்­கு­வ­தன் தொடர்­பில் செயல்­பட்டு வரு­கிறது.

உப்­பு­நீரை குடி­நீ­ராக்­கும் நடை­முறை மூலம் எரி­சக்தி பெறு­வது அந்­தப் புதிய தொழில்­நுட்­பத்­தின் நோக்­கம். இப்­போது இத்­த­கைய ஆலை­கள் சவ்­வூ­டு­ ப­ர­வல் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்து­ கின்­றன. மெல்­லிய சுவர்­கள் மூலம் கடல்­நீர் பாய்ச்­சப்­படும்போது அந்­தச் சுவர்­கள் கடல்­நீ­ரில் இருக்­கும் உப்பை வடி­கட்­டி­வி­டும்.

ஆனால் புதிய தொழில்­நுட்ப முறைப்­படி கடல்­நீ­ரில் இருக்­கும் உப்பு மின்­னாற்­ப­குப்பு முறை மூலம் பிரித்­தெ­டுக்­கப்­படும்.

கடல்­நீ­ரில் உப்பு அதி­கம் உள்­ளது. உப்­பிற்கு சோடி­யம் குளோரைடு என்று பெயர். தண்­ணீ­ரில் உப்பு கரை­யும்போது அதில் உள்ள மூல­கங்­கள் அணுக்­க­ளாகப் பிரி­கின்­றன.

சோடி­யம் அணு நேர்­மின் சக்தி­யை­யும் குளோரைடு அணு எதிர்­மின் சக்­தி­யை­யும் கொண்­டவை. மின்­னாற்­ப­குப்பு முறைப்­படி இரு முனை­கள் மூலம் கடல்­நீ­ரில் மின்­சா­ரம் பாயும்­போது நேர்­மின் சக்தி முனை குளோ­ரைடு அணுக்­களைக் கவர்ந்து ஈர்க்­கும். எதிர்­மின்சக்தி முனை சோடி­யம் அணுக்­க­ளைக் கவர்ந்து ஈர்க்­கும்.

இவ்­வ­ழி­யில் உப்பு பிரித்து எடுக்­கப்­படும். அதே­வே­ளை­யில், அந்த அணுக்­கள் மின்சக்­தி­யைக் கொண்­டவை என்­ப­தால் அவை மின்­மு­னை­களில் இருந்து விடு­விக்­கப்­ப­டும்­போது மின்­சா­ரத்தை உரு­வாக்­கும் என்று இந்­தப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் இணைப் பேரா­சி­ரி­யர் யாங் ஹுங் யிங் தெரி­வித்­தார். இவரே இந்­தப் புதிய தொழில்­நுட்ப ஆய்­வுக் குழு­வுக்குத் தலைமை ஏற்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!