நாடா­ளு­மன்­றத்­தில் ‘சீக்கா’ உட்­பட தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள் பற்­றிய விவா­தம்

சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங்­கும் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங்­கும் சிங்­கப்­பூர்-இந்­தியா முழு­மை­யான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு ஒப்­பந்­தம் (சீக்கா) உட்­பட சிங்­கப்­பூ­ரின் தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள் பற்றி அமைச்­சர்­நிலை அறிக்­கை­களை அடுத்த வாரம் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்து உரை­யாற்­று­வார்­கள்.

சிங்­கப்­பூ­ருக்கு தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள் எந்த அள­வுக்கு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தவை என்­பதை விளக்­கு­வ­து­டன் குறிப்­பாக, தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள் வெளி­நாட்டு நிபு­ணர்­களை சிங்­கப்­பூ­ரில் சுதந்­த­ர­மாக வேலை செய்­ய­வும் வாழ­வும் அனு­ம­திக்­கிறது என்ற பொய்­யான குற்­றச்­சாட்­டு­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கப்­படும் என்று திரு ஓங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இந்­தி­யர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட இரு வாய்­மொழி மற்­றும் உட­ல் ரீதியிலான தாக்­கு­தலை மேற்­கோள் காட்­டிய அமைச்­சர் ஓங், கடந்த இரண்டு ஆண்டு களாக சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் புலம்­பெ­யர் இந்­தி­யர்­க­ளுக்கு எதி­ரான உணர்­வு­கள் அதி­க­ரித்­தி­ருக்­கும் வேளை­யில் இச்­சம்­ப­வங்­கள்

நிகழ்ந்­துள்­ளன என்­றார்.

"இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட வேண்­டும் என்று சிங்­கப்­பூ­ரர்­கள் குரல் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.

"அதே­வே­ளை­யில் சீக்கா உடன்­பாடு இந்­தி­யா­வைச் சேர்ந்த நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ருக்கு இங்கு சுதந்­தி­ர­மாக வேலை செய்ய வாய்ப்பு அளித்­தி­ருக்­கிறது என்று சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருக்­கிறது.

"மே மாத நாடா­ளு­மன்­றக்

கூட்­டத்­தின்­போது, சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள் மற்­றும் சீக்கா தொடர்­பில் சிங்­கப்­பர் முன்­னேற்­றக் கட்­சிக்கு கேள்­வி­கள் ஏதும் இருந்­தால், அது தொடர்­பான தீர்­மா­னத்­தைத் தாக்­கல் செய்­ய­லாம் என்று கூறி­யி­ருந்­தார்.

"இதன் மூலம் இவ்­வி­வ­கா­ரம் பற்­றிய முறை­யான விவா­தத்­தில் இது­போன்ற தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு எத்­த­கைய நன்­மை­கள் கிடைக்­கின்­றன என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கருத்­து­ரைக்க வாய்ப்பு ஏற்­படும். அதன் மூலம் சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி சீக்கா உடன்­பாடு கூறிய கருத்­து­கள் உண்­மை­யல்ல என்­ப­தும் புலப்­படும்.

"சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி இதன் தொடர்­பில் தீர்­மா­னம் ஒன்­றைத் தாக்­கல் செய்­வதற்கு முன்பே அக்­கட்­சி­யின் தொகு­தி­யில்லா உறுப்­பி­னர் உட்­பட இதர உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றக் கேள்வி

களைத் தாக்­கல் செய்­துள்­ள­னர்," என்­றுப் திரு ஓங் விளக்­கி­னார்.

லாரன்ஸ் வோங்­கின்

அமைச்­சர்­நிலை அறிக்கை

கடு­மை­யாக்­கப்­பட்ட கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் பாதிக்­கப்­பட்­டு­உள்ள வர்த்­த­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் உத­வும் வகை­யில், அர­சாங்­கத்­தின் கொவிட்-19 ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அடுத்த திங்­கட்­கி­ழமை அம­ரும் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் அமைச்­சர்­நிலை அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­வார். அன்­றைய தினம் பிற்­

ப­கல் 3 மணிக்கு அமைச்­சர் வோங் உரையாற்­று­வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!