இனவாத கருத்துகளைக் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட மாதுக்கு $5,000 பிணை

எம்ஆர்டி ரயிலில் இனவாத கருத்துகளை வேண்டுமென்றே கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சொத்து முகவரான 57 வயது டான் டியாவ் ஹியோங் (படம்) நேற்று $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்னதாக மனநலக் கழகத்தில் மனநலப் பரிசோதனைக்காக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

திருவாட்டி டானுக்காக வழக்கறிஞர் சிங் கெங் ஹுவாட் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். மனநலக் கழகத்தின் பரிசோதனை முடிவுகள் தயாராகிவிட்டன என்று அறிவதாகவும் அதன் தொடர்பில் தமது கட்சிக்காரருக்கு கட்டாய சிகிச்சை ஆணை வழங்க தாம் விண்ணப்பிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டாய சிகிச்சை ஆணை பெற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிறைத் தண்ட னைக்கு முன் தங்கள் மனநலப் பிரச் சினைகளுக்கு சிகிச்சை பெற வேண்டும்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, எம்ஆர்டி ரயிலில் உள்ள மற்ற பயணிகளிடம் இனவாதக் கருத்துகளைக் கூறினார் என்றும் பின், மே 11ஆம் தேதி எம்ஆர்டி ரயிலில் பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்தார் என்றும் அந்த மாது மீது குற்றம் சாட்டப்பட்டது.

வேலையிலிருந்து நீக்கப்பட்ட திருவாட்டி டானின் வழக்கு இம்மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!