உயிர்வாயுமானி பெறுவதில் சிக்கல்; மீண்டும் துண்டுப்பிரசுரம் கேட்கும் மக்கள்

தெமாசெக் அறநிறுவனம் சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக உயிர்வாயுமானியைக் கொடுக்கிறது.

இதைப் பெறுவதற்கான துண்டுப்பிரசுரங்கள் அஞ்சல் பெட்டி மூலம் ஜூன் 28 முதல் ஜூலை 3 வரை குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டன.

ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 5 வரை 300க்கும் மேற்பட்ட ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், ஜயண்ட், கோல்டு ஸ்டோரேஜ், வாட்ஸ்சன்ஸ், யூனிட்டி, கார்டியன் கடைகளில் துண்டுப்பிரசுரத்தைக் கொடுத்து உயிர்வாயுமானியைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிலர் அந்தத் துண்டுப்பிரசுரத்தை தவறுதலாக வீசிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

ஆகையால் தங்களுக்கு வேறு துண்டுப்பிரசுரம் அனுப்பும்படி சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்குக் கிடைத்த துண்டுப்பிரசுரத்தைத் தவறுதலாக தூக்கிபோட்டுவிட்டதாகக் கூறும் குடியிருப்பாளர்கள், அந்தப் பிரசுரங்கள் இருந்தால்தான் உயிர்வாயு மானியைப் பெற முடியும் என்பது தங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்கள்.

இது பற்றி ஃபேஸ்புக்கிலும் தெமாசெக் அறநிறுவனத்தின் இணையப் பக்கத்திலும் கருத்து தெரிவித்து இருக்கும் சிலர், அந்தக் கருவியைப் பெறுவதற்கு வேறு ஏதாவது வழி கிடைக்குமா என்று கேட்டனர்.

இதர பலரும் தாங்கள் நிபந்தனைகளைச் சரியாகப் படிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர்.

அந்தத் துண்டுப்பிரசுரத்தில் நான்கு மொழிகளிலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.

‘இந்தத் துண்டுப்பிரசுரத்தை உங்களுடைய உயிர்வாயுமானியுடன் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’ என்று அந்தப் பிரசுரத்தில் சிவப்பு நிறக் கட்டத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

உயிர்வாயுமானியை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்போது அதைப் பெறலாம் என்பதை தெரிவிக்கும் விவரங்களும் பார்கோடும் அதில் இருந்தன.

இதனிடையே, ஃபேஸ்புக் பயனாளிகளுக்குப் பதில் கூறிய தெமாசெக் அறநிறுவனம், வேறு ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுக்க தன்னால் இயலாது என்று தெரிவித்துவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!