உயிர்வாயுமானி விநியோகம் தொடக்கம்

தீவு முழு­வ­தும் உள்ள பல்­வேறு பேரங்­கா­டி­க­ளி­லும் மருந்­துக் கடை­க­ளி­லும் உயிர்­வா­யு­மானி (ஆக்ஸிமீட்டர்) விநி­யோ­கம் நேற்று தொடங்­கி­யது. தெமா­செக் அறு­நி­று­வ­னம் உயிர்­வா­யு­மா­னி­களை ஒவ்­வொரு குடும்­பத்­திற்கும் இல­வ­ச­மாக வழங்­கு­கிறது. ரத்­தத்­தில் உள்ள உயிர்­வாயு அள­வைக் கண்­ட­றிய இந்­தக் கருவி உத­வும். புதிய, வேக­மா­கப் பர­வக்­கூ­டிய கொரோனா கிருமி வகை­யின் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் இது உத­வும்.

பீஷான், கிள­மெண்டி, சிராங்­கூன் ஆகிய வட்­டா­ரங்­களில் உள்ள பேரங்­கா­டி­க­ளுக்­கும் மருந்­துக் கடை­க­ளுக்­கும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு நேற்­றுக் காலை சென்­றது.

அப்­போது அங்­குள்ள ஒவ்­வொரு கடை­யி­லும் உயிர்­வா­யு­மா­னி­யைப் பெற்­றுக்­கொள்ள சிறிய வரி­சை­யில் மக்­கள் நின்­ற­தைக் காண முடிந்­தது. தெமா­செக் அற­நி­று­வ­னம் அஞ்­சல் மூலம் அண்­மை­யில் வழங்­கி­யி­ருந்த துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை சிலர் கொண்டு வரா­த­தால் அவர்­கள் திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர். உயிர்­வா­யு­மா­னி­யைப் பெற்­றுக்­கொள்ள துண்­டுப்­பி­ர­சு­ரம் தேவை.

உயிர்­வா­யு­மா­னி­க­ளைப் பெற்றுக்­கொண்­ட­வர்­களில் பெரும்­பா­லா­னோர் மூத்­தோர், அல்­லது வீட்­டில் மூத்­தோர், பிள்­ளை­கள் உடைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளா­வர்.

கிள­மெண்டி மால் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள வாட்­சன்ஸ் கடை­யில் உயிர்­வா­யு­மா­னி­யைப் பெற்­றுக்­கொண்­டார் சஹானா ராஜேந்­தி­ர­கு­மார், 16. தமது பெற்­றோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­போ­தும் அவர்­க­ளது ஆரோக்­கி­யம் குறித்து இவர் கவலை கொள்­கி­றார்.

"தடுப்­பூசி 100 விழுக்­காடு நோயெ­திர்ப்­புச் சக்­தி­யைத் தரும் என்­ப­தற்கு உத்­த­ர­வா­தம் கிடை­யாது. ரத்­தத்­தில் உயிர்­வாயு அளவு குறை­கி­றதா என்­ப­தைப் பரி­சோ­திக்க உயிர்­வா­யு­மானி சிறந்த ஒரு வழி. உயிர்­வாயு அளவு குறைந்­தால் உடனே மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல முடி­யும்," என்­றார் சஹானா.

ஃபேர்பி­ரைஸ், ஷெங் சியோங், ஜயண்ட், கோல்ட் ஸ்டோ­ரேஜ் ஆகிய பேரங்­கா­டி­க­ளி­லும் வாட்­சன்ஸ், யூனிட்டி, கார்­டி­யன் ஆகிய மருந்­துக் கடை­க­ளி­லும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை உயிர்­வா­யு­மானி­களைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

ஜூன் 28 முதல் ஜூலை 3 வரை ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் உயிர்­வா­யு­மா­னி­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான துண்­டுப்­பி­ர­சு­ரங்­கள் அஞ்­சல் பெட்­டி­களில் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

எனி­னும், விளம்­ப­ரத்­தாள் என நினைத்து குடி­யி­ருப்­பா­ளர்­களில் சிலர் தவ­று­த­லாக துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வீசி­விட்­ட­னர்.

புதிய துண்­டுப்­பி­ர­சு­ரங்­க­ளைத் தன்­னால் வழங்க இய­லாது என தெமா­செக் அற­நி­று­வ­னம் கூறி­யது.

துண்­டுப்­பி­ர­சு­ரங்­க­ளைக் கொண்டு வரா­தோரை சில மருந்­துக் கடை­கள் நேற்று திருப்பி அனுப்ப நேரிட்­டது.

ஜங்­ஷன் 8 கடைத்­தொ­கு­தி­யில் கார்­டி­யன் கடை­யில் பகு­தி­நேர விற்­ப­னை­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­மதி ரினா, ஒரு­வர் தமது அடை­யாள அட்­டை­யைக் கொண்டு உயிர்­வா­யு­மா­னி­யைப் பெற வந்­த­தா­க­வும் அவர் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தா­க­வும் சொன்­னார். "துண்­டுப்­பி­ர­சு­ரங்­க­ளைக் கொண்டு வரா­தோ­ருக்கு எப்­படி உத­வு­வது என்ற தக­வல் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!