செய்திக்கொத்து

பிரதமர் லீ: இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து தவறான சித்திரிப்பு, கவலை

சிங்கப்பூர் - இந்தியா இடையிலான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு குறித்த தவறான சித்திரிப்பு, பொது மக்களிடம் தேவையற்ற கவலையை ஏற்படுத்திவிட்டதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். வேலை, வெளி நாடுகளிலிருந்து வரும் போட்டி, வெளிநாட்டினர் அதிகம் பேர் இங்கு வேலை செய்வதும் வசிப்பதும் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை தொடர்பான சிங்கப்பூரர்களின் கவலைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணும் என்று பிரதமர் லீ ஒரு ஃபேஸ்புக் பதிவுமூலம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு உடன்பாடே காரணம் என்று சொன்னால், நம்மால் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போய் அதை மேலும் சிக்கலாக்கிவிடுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் சிங்கப்பூர் பெரும் பலனடைந்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பேரமாகப் பயன்படுத்தப்படவில்லை: துணைப் பிரதமர் ஹெங் விளக்கம்

சிங்கப்பூர் - இந்தியா இடையிலான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள 'தனிநபர்களுக்கான தற்காலிக நுழைவு அனுமதி'க்கு வகைசெய்யும் உட்பிரிவு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இணக்கத்தை எட்டுவதில் ஒரு பேரமாகப் பயன்படுத்தப்படவில்லை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். 2005ல் அந்தப் பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்தானபோது அதன் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக திரு ஹெங் செயல்பட்டார். உள்ளூர்வாசிகளிடம் இருந்து இந்தியர்கள் வேலைகளை எடுத்துக்கொள்ள அந்த உடன்பாடு வழிவகை செய்வதாக விமர்சிக்கப்படுகிறது. ஆயினும், குடிநுழைவையும் வெளிநாட்டு மனிதவளத்தையும் ஒழுங்குபடுத்துவதில் குறுக்கிடும் விதமாக அந்த உடன்பாட்டில் எந்த ஓர் அம்சமும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் திரும்ப திரும்பத் தெளிவுபடுத்தி வருகிறது.

86% டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

சிங்கப்பூரில் டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களில் 86 விழுக்காட்டினர், அதாவது 46,054 பேர் இரு கொவிட்-19 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தார். மொத்தம் 53,268 பேர் டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டும் தொழிலைச் செய்துவரும் நிலையில், அவர்களில் 92 விழுக்காட்டினர், அதாவது 48,846 பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, சென்ற மாதம்வரை டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் 43 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டனர். அவற்றில் ஆறு சம்பவங்களில், அந்த ஓட்டுநர்கள் மூலம் அவர்களின் குடும்பத்தினரையும் கிருமி தொற்றியதாகப் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!