பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்கு உத­வும் செயல் வரை­வுத் திட்­டம்

வரும் ஆண்­டு­களில் உடற்­கு­றை­யுள்­ள­வர்­க­ளுக்­குப் பரா­ம­ரிப்பு சேவை­களை வழங்­கு­வோ­ரின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் ஒரு புதிய செயல் வரை­வுத் திட்­டம் அதன் தொடர்­பான அமைப்­பு­க­ளுக்­கும் முக­வை­க­ளுக்­கும் ஓர் அடித்­த­ளத்தை அமைத்து கொடுக்­கும்.

'கேர்­கி­வர் ஏக்­‌ஷன் மேப்' எனப்­படும் பரா­ம­ரிப்­பா­ளர் செயல் வரை­வுத் திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது. அது, உடற்­கு­றை­யுற்­ற­வர்

களின் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­கான ஆத­ரவை மேம்­ப­டுத்த எண்­ணும் சமூக சேவை முக­வை­க­ளுக்­கும் இதர அமைப்­பு­க­ளுக்­கும் ஒரு வழி­காட்­டி­யாக இருக்­கும்.

கொள்கை ஆய்­வுக் கழ­க­மும் 'எஸ்ஜி எனே­பல்' அமைப்­பு­க­ளின் ஆத­ர­வு­டன் இந்த செயல் வரை­வுத் திட்­டத்தை, 2018ல் ஒன்று சேர்ந்த 25 சமூ­கப் பங்­கா­ளி­கள், சமூக சேவை முக­வை­கள், மருத்­து­வ­ம­னை­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்ட பரா­ம­ரிப்­பா­ளர்­கள் ஆத­ர­வுக் ­கான பங்­கா­ளி­கள் கூட்­டணி அமைத்­துள்­ளது.

வரை­வுத் திட்­டத்­தின் மூன்று தூண்­க­ளாக, பய­னா­ளரை மைய­மா­கக் கொண்டு சேவை­யாற்­றும் விநி­யோ­கம், சுய உதவி மற்­றும் பரஸ்­பர ஆத­ரவு, சமூக மற்­றும் சமூக ஒன்­றி­ணைப்பு ஆகி­யவை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

அது, பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளின் தேவையை நன்கு பூர்த்தி செய்­யும் திட்­டங்­களை முக­வை­கள் வரைய 60க்கு மேற்­பட்ட யோச­னை­களை வழங்­கும்.

உதா­ர­ணத்­துக்கு, அறிவு வளர்ச்சி குன்­றி­ய­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் 'மைண்ட்ஸ்' அமைப்பு, எதிர்­கா­லத்­தில் பரா­ம­ரிப்­புத் திட்­ட­மி­டு­தல் தொடர்­பான அவர்­க­ளின் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­க­ளுக்­குத் திட்­ட­மிட உத­வும் இணைய கரு­வியை அறி

முகப்­ப­டுத்­த­வுள்­ளது.

"இந்­தக் கூட்­ட­ணி­யின் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சி­களில் விவா­திக்­கப்­படும் ஒரு முக்­கி­ய­மான அம்­சம் என்­ன­வென்­றால், அவர்­கள் தங்­க­ளுக்­குப் பிறகு தங்­கள்

பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லம் எப்­படி இருக்­கும் என்ற கவலை பற்­றி­யது. தங்­கள் பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்­துக்­குத் திட்­ட­மி­டு­தலை எப்­போது, எங்­கி­ருந்து தொடங்­கு­வது என்­பது குறித்து அவர்­க­ளுக்கு எந்த யோச­னை­யும் இல்லை," என்­றார் மைண்ட்ஸ் அமைப்­பின் பரா­ம­ரிப்­பா­ளர் சேவை­கள் பிரி­வின் தலை­வ­ரான ஓங் லே ஹூன்.

"இத்­திட்­டத்­தின் மூலம் இவ்­வாண்டு இறு­திக்­குள் குறைந்­தது 300 பரா­ம­ரிப்­பா­ளர்­களை அடைய திட்­ட­மிட்­டுள்­ளோம்," என்­றும் திரு­வாட்டி ஓங் கூறி­னார்.

"பரா­ம­ரிப்­பா­ளர்­களை எட்­டும் அமைப்­பு­க­ளின் வழக்­க­மான முயற்­சி­கள் மூலம், அவர்­க­ளுக்கு இன்­னும் அதி­க­மான ஆத­ரவு தேவைப்­ப­டு­வது தெளி­வா­கப் புலப்­ப­டு­கிறது.

"அவர்­க­ளுக்­குக் கிடைக்­கக்

கூடிய வெவ்­வேறு சேவை­கள் பற்­றி­யும் சமூக அள­வில் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும் ஆத­ரவு பற்­றி­யும் அவர்­கள் தெரிந்­து­கொள்ள விரும்­பி­றார்­கள்," என்­றார் 'எஸ்ஜி எனே­பல்' அமைப்­பின் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் ஆத­ரவு பிரி­வின் இயக்­கு­நர் பிரேமா கோவிந்­தன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!