பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவை சீரமைத்த சட்டம்

சிங்கப்பூரில் பிள்ளைகளின் பிறப்பைப் பதிவு செய்ய பெற்றோருக்கு தற்போதுள்ள 14 நாட்கள் அவகாசத்துக்கு பதில், 42 நாள் அவகாசம் அளிக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட அச்சட்டத்தின் கீழ், பிறப்புகள், இறப்புகள், இறந்து பிறந்த குழந்தைகளின் விவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிறப்பு இறப்புகளைத் தெரிவித்துப் பதிவு செய்யும் முறையை சீரமைக்க புதிய சட்டம் வழிவகுக்கும். மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களுக்கு மருத்துவர்கள் இணையம் வழியாக சான்றிதழ் அளிப்பார்கள். அவை தானாக பதிவு செய்யப்பட்டு விடும்.

வீட்டில் நிகழும் மரணங்களுக்கு, அந்நேரத்தில் உடன் இருந்த உறவினர் மருத்துவர் ஒருவரிடம் மரணத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டும். மருத்துவர், அந்த வீட்டுக்குச் சென்று உடலைப் பரிசோதித்துவிட்டு, மரணத்துக்கான காரணம் பற்றி இணையம் வழியாக சான்றிதழ் வழங்க வேண்டும்.

இந்த இரண்டு திருத்தங்களினால், மரணங்களின் பதிவு தானாக இடம்பெற்று விடும். மரணச் சான்றிதழை எடுத்துக்கொண்டு போலிஸ் நிலையம் போன்ற பதிவு நிலையங்களுக்குச் சென்று அதைப் பதிவு செய்ய தேவை இருக்காது. அத்துடன், மின் வடிவிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற்றோரும் உறவினரும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!