மூத்தோருக்கு தடுப்பூசி: அரசாங்கம் பெருமுயற்சி

அதி­க­மான மூத்த குடி­மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்­கு­விக்­கும் வகை­யில் பெரி­ய­தொரு நட­வ­டிக்கை இடம்­பெ­றும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எளி­தில் ஆளா­கக்­கூ­டி­ய­வர்­கள் அவர்­கள் என்­ப­தால் முக்­கி­யத்­து­வம் தரப்­ப­டு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார்.

அதி­க­மா­ன­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட நிலை­யில் எல்­லை­க­ளைத் திறக்­கும் மற்ற நாடு­க­ளில்­கூட கொவிட்-19 நோய்த்­தொற்­றால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மூத்த குடி­மக்­கள்­தான்.

"நமது மூத்த குடி­மக்­களில் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­பதே நாம் இப்­போது அவ­சி­ய­மா­கச் செய்ய வேண்­டி­யது," என்று நேற்று இணை­யம் வழி­யாக நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு ஓங் குறிப்­பிட்­டார்.

"மற்ற வய­துப் பிரி­வி­ன­ரோடு ஒப்­பி­டு­கை­யில் 70 வய­தைத் தாண்­டி­ய­வர்­கள் குறைந்­த­பட்­சம் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட, பதிவு செய்த விகி­தம் மிக­வும் குறை­வ­பாக உள்­ளது. இந்த நிலை மாற­வேண்­டும்.

"70 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அல்­லது முதல் தடுப்

­பூ­சிக்­குப் பதிவு செய்­துள்­ளோ­ரின் விகி­தம் 71 விழுக்­காடு.

"அதே­போல 60க்கும் 69க்கும் இடைப்­பட்ட வய­தி­னரி­டையே அந்த விகி­தம் 85 விழுக்­கா­டா­க­வும் 50க்கும் 59க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் மற்­றும் 40க்கும் 49க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் மத்­தி­யில் அந்த விகி­தம் 86 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது.

"30க்கும் 39க்கும் இடைப்­பட்ட வய­தி­ன­ரில் 78 விழுக்­காட்­டி­னர் குறைந்­த­பட்­சம் முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டனர் அல்­லது பதிவு செய்­துள்­ள­னர். 20க்கும் 29க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் மற்­றும் 12க்கும் 19க்கும் இடைப்­பட்ட வய­தி­னர் இடையே அந்த விகி­தம் 80 விழுக்­கா­டாக உள்­ளது," என்று அமைச்­சர் ஓங் விவ­ரித்­தார்.

கொவிட்-19 தொடர்­பான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத்­த­லை­வ­ரான திரு ஓங் மேலும் கூறு­கை­யில், "பிரிட்­டன், அமெ­ரிக்கா, இஸ்­ரேல் போன்ற நாடு­களில் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட பின்­னர் இளைய வய­தி­ன­ரி­டம் தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்­தது. கார­ணம், குறை­வா­ன­வர்­களே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர். இருப்­பி­னும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தும் கடு­மை­யான நோய்த் தொற்­றுக்கு ஆளா­வ­தும் பெரும்­பா­லும் மூத்­த­வர்­கள் என்­ப­தில் எந்த மாற்­ற­மு­மில்லை.

"நான் வெளி­யில் போகா­த­தால் நான் பத்­தி­ர­மாக இருக்­கி­றேன் என்று மூத்­த­வர்­கள் சொல்­வது பொருந்­தாது.

"அதனை ஏற்க இய­லாது. கார­ணம் அண்­மைய கிரு­மித்­தொற்று போக்கை நாம் கவ­னித்­தால் பெரும்­பா­லான தொற்­று­ச் சம்பவங்கள் வீட்­டில் நிகழ்ந்­தவை. எனவே வெளி­யில் செல்­லா­த­தால் பாது­காப்பு கிடைக்­கிறது என்­பது பல­ன­ளிக்­காது. கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும்­போது உங்­கள் குடும்­பத்­தி­னர் வெளி­யில் செல்­வார்­கள். தொற்­றை அவர்­கள் கொண்­டு­வ­ரக்­கூ­டும்.

"எனவே அதி­க­மான மூத்­தோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள ஊக்­கு­விக்­கும் வகை­யில் பெரி­ய­தொரு நட­வ­டிக்கை இடம்­பெ­றும். தேவைப்­பட்­டால் அவர்­க­ளின் வீடு­க­ளுக்கே அதி­கா­ரி­கள் செல்­வார்­கள்.

"உங்­க­ளுக்­குத் தெரிந்த, பக்­கத்­தில் வசிக்­கும் அல்­லது உற­வி­னர்­க­ளாக இருக்­கும் மூத்­த­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தயங்­கி­னால் அவர்­க­ளி­டம் உண்மை நில­வ­ரத்தை விளக்கி உத­வுங்­கள். தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அவர்­களை ஊக்­கப்­ப­டுத்­துங்­கள்," என்று திரு ஓங் கேட்­டுக்­கொண்­டார்.

ஓங்: தேவைப்பட்டால் மூத்தோரின் வீடுகளுக்கு அதிகாரிகள் செல்வர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!