ஜூலை 21 முதல் பேரங்காடிகளில் டிரேஸ்டுகெதர் மூலமான வருகைப்பதிவு மறுஅறிமுகம்

1 mins read
abd3cf74-6c27-4863-bfa4-fb3c7a142652
பேரங்­கா­டி­களில் திர­ளும் கூட்­டம் கொவிட்-19 பர­வலை அதி­கப்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சேஃப்என்ட்ரி வருகைப் பதிவுமுறை யுடனான கட்டடங்களில் இயங்கும் பேரங்­கா­டி­களில் 'டிரேஸ்­டு­கெ­தர் மூலம் சேஃப்என்ட்ரி' 'சேஃப்என்ட்ரி கேட்வே' போன்றவை ஜூலை 21 முதல் மறு­அ­றி­மு­கம் காண்­கின்­றன.

'டிரேஸ்­டு­கெ­தர் மூலம் சேஃப் என்ட்ரி' பதி­வு­மு­றை­யைக் கொண்­டி­ருக்­கும் கட்­டடங்­களில் இயங்­கும் பேரங்­கா­டி­க­ளில் இவை அவசியம் என்று கொவிட்-19க்கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று தெரி­வித்­தது.

மேலும் பேரங்­கா­டி­களும் கட்­ட­டங்­களும் ஒரே­நே­ரத்­தில் திறக்­கப்­பட்டு மூடப்­படும் சூழ்­நி­லை­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

பேரங்­கா­டி­களில் திர­ளும் கூட்­டம் கொவிட்-19 பர­வலை அதி­கப்­ ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தால் இந்த ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கிறது.

நோய் தொற்­றி­யோ­ரு­டன் தனிப்­பட்­ட­வர்­கள் கட்­ட­டங்­க­ளின் உள்ளே ஒன்­று­க­லக்­கும் நேரங்­களில் தொடர்­புத் தடங்­களை அறிய சேஃப் என்ட்ரி வருகைப் பதிவு ஏற்­பாடு கள் உத­வும் என சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

'சேஃப்என்ட்ரி கேட்வே' என்­பது வேக­மா­க­வும் தடை­யற்ற முறை­யி­லும் கட்டங்களில் உள்­நு­ழை­யும் வச­தி­யைத் தரு­கிறது.

டிரேஸ்­டு­கெ­தர் சாத­னம் அல்­லது டிரேஸ்­டு­கெ­தர் கைபே­சிச் செய­லியை இந்த கேட்வே அரு­கில் காண்­பித்­தால் போது­மா­னது, உள்ளே நுழை­வ­தற்­கான பதிவு கிைடத்­து­வி­டும்.

மற்ற கட்­ட­டங்­க­ளுக்­குள் இடம்­பெ­றா­மல் தனி­யாக இயங்­கும் பேரங்­கா­டி­கள் ஏற்­கெ­னவே 'டிரேஸ்­டு­கெ­தர் மூலம் சேஃப்என்ட்ரி' என்­னும் வரு­கைப் பதி­வு­மு­றை­யை­யும் 'சேஃப்என்ட்ரி கேட்வே' நுழை­வு­மு­றை­யை­யும் அமல்­ப­டுத்தி இருந்­தால் அவற்றை அவை தொட­ர­லாம்.

"சேஃப்என்ட்ரி பதி­வு­முறை தொடர்­பான விதி­க­ளுக்கு இணங்கி நடந்­து­கொள்­ள­வும் டிரேஸ்­டு­கெ­தர் சாத­னம் அல்­லது கைபே­சி­யைப் பயன்­ப­டுத்­து­மா­றும் பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள். அவர்­கள் தங்­க­ளை­யும் தங்­க­ளது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் பாதுகாக்க இது உத­வும்," என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.