பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவை சீரமைக்க சட்டம்

சிங்­கப்­பூ­ரில் பிள்­ளை­க­ளின் பிறப்­பைப் பதிவு செய்ய பெற்­றோ­ருக்கு தற்­போ­துள்ள 14 நாட்­கள் அவ­கா­சத்­துக்கு பதில், 42 நாள் அவ­கா­சம் அளிக்­கும் புதிய சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட அச்­சட்­டத்­தின் கீழ், பிறப்­பு­கள், இறப்­பு­கள், இறந்த, பிறந்த குழந்­தை­க­ளின் விவ­ரங்­கள் ஆகி­ய­வற்­றைப் பதிவு செய்­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

பிறப்பு இறப்­பு­க­ளைத் தெரி­வித்­துப் பதிவு செய்­யும் முறையை சீர­மைக்க புதிய சட்­டம் வழி

வகுக்­கும்.

மருத்­து­வ­ம­னை­களில் நிக­ழும் மர­ணங்­க­ளுக்கு மருத்­து­வர்­கள் இணை­யம் வழி­யாக சான்­றி­தழ் அளிப்­பார்­கள்.

அவை தானாக பதிவு செய்­யப்­பட்­டு­வி­டும்.

வீட்­டில் நிக­ழும் மர­ணங்

களுக்கு, அந்­நே­ரத்­தில் உடன் இருந்த உற­வி­னர் மருத்­து­வர் ஒரு­வ­ரி­டம் மர­ணத்­தைப் பற்றி தெரி­விக்க வேண்­டும்.

மருத்­து­வர், அந்த வீட்­டுக்­குச் சென்று உட­லைப் பரி­சோ­தித்­து­விட்டு, மர­ணத்­துக்­கான கார­ணம் பற்றி இணை­யம் வழி­யாக சான்­றி­தழ் வழங்க வேண்­டும்.

இந்த இரண்டு திருத்­தங்­க­ளி­னால், மர­ணங்­க­ளின் பதிவு தானாக இடம்­பெற்­று­வி­டும்.

மர­ணச் சான்­றி­தழை எடுத்­துக்­கொண்டு போலிஸ் நிலை­யம் போன்ற பதிவு நிலை­யங்­க­ளுக்­குச் சென்று அதைப் பதிவு செய்ய வேண்­டிய தேவை இருக்­காது.

அத்­து­டன், மின் வடி­வி­லான பிறப்பு, இறப்பு சான்­றி­தழ்­க­ளைப் பெற்­றோ­ரும் உற­வி­ன­ரும் பதி

விறக்­கம் செய்­து­கொள்­ளும் வச­தி­யும் இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!