கள்ளநோட்டுகளைப் பயன்படுத்தியதாக மேலும் ஒருவர் மீது குற்றச்சாட்டு

கள்­ள­நோட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு, பண நோட்­டு­க­ளின் பிரதி அச்­ச­டிக்­கப்­பட்ட தாள்­களை வெட்டி எடுத்த சந்­தே­கத்­தின் பேரில் ஆட­வர் ஒரு­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

கள்­ள­நோட்­டு­க­ளைப் பயன்­

ப­டுத்­தி­ய­தற்­காக கடந்த வெள்­ளிக்­கி­ழமை மற்றும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கைது செய்­யப்­பட்ட இரண்டு பேரில் 44 வயது மஹடி அப் லத்­தீஃப் என்பவரும் ஒரு­வர்.

முக­மது ஃபர்­ஹான் ஃபரோஸ் என்­ப­வ­ரு­டன் கூட்­டுச்­சேர்ந்து கள்­ள­நோட்­டு­களை அச்­ச­டிக்க திட்­ட­மிட்­ட­தன் தொடர்­பில் மஹடி மீது நீதி­மன்­றத்­தில் நேற்று ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. மஹடி சென்ற ஜூன் மாதம் ஒரு வேனில் பண­நோட்டு பிர­தி­களை வெட்­டி­னார் என்று கூறப்­பட்­டது. மஹ­டி­யும் அவ­ரது கூட்­டா­ளி­யும் கைதா­ன­போது அவர்­க­ளி­ட­மி­ருந்து $17.500 மதிப்­பி­லான கள்­ள­நோட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக போலி­சார் கூறி­னர்.

அந்­தக் கள்­ள­நோட்­டு­கள், போட்­ரேட் எனும் சித்­தி­ரங்­கள் இடம்­பெற்­றி­ருக்­கும் நோட்டு தொட­ரைச் சேர்ந்­தவை.

முதன்­மு­த­லில் 1999இல் வெளி­யி­டப்­பட்ட அந்­தப் பண­நோட்­டு­கள் இன்­னும் புழக்­கத்­தில் உள்­ளன.

ஞாயிற்­றுக்­கி­ழமை அன்று நடந்த மற்­றொரு சம்­ப­வத்­தில், கற்­ற­நோட்­டு­கள் பயன்­ப­டுத்த முயன்ற 63 வயது நபர் கைது செய்­யப்­பட்­டார்.

அவர் உபி ரோடில் உள்ள ஒரு கடை­யில் லாட்­டரிச் சீட்டு வாங்­கக் கள்­ள­நோட்டு பயன்­ப­டுத்­தி­னார் என்று தக­வல் கிடைத்த பின்­னர் போலி­சார் அவ­ரைக் கைது செய்­த­னர்.

அவ­ரி­ட­மி­ருந்து போதைப் புழக்­கத்­துக்­குத் தேவை­யான பொருட்­களும் பிடி­பட்­ட­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை கைதான இரு­வ­ருக்­கும் 63 வயது நப­ருக்­கும் ஒரு­வரை ஒரு­வர் தெரி­யுமா என்­பது தெளி­வா­க­வில்லை.

அதற்கு முன்­ன­தாக, கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்று உட­லு­றவு வீரிய மருந்­து­களை வாங்க கள்­ள­நோட்டு பயன்­ப­டுத்­திய சந்­தே­கத்­தின்­பே­ரில் 27 வயது ஆட­வர் கைதா­னார். சம்­ப­வம் நடந்த பத்து மணி நேரத்­துக்­குள் போலி­சார் சந்­தேக நப­ரைக் கண்டு

பிடித்து கைது செய்­த­தா­கக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!