வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்குப் பொருட்கள் நன்கொடை

சிங்­கப்­பூர் சிறு­மி­யர் படை­யும் தென்­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­ற­மும் இணைந்து நடத்­தும் 'ஃபிரண்ட் இன் டீட் எட் சவுத் வெஸ்ட்' திட்­டத்­தின்­கீழ் 3,000 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் நன்­கொ­டை­யாக வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

வசதி குறைந்­தோ­ருக்­கும் வய­தா­னோ­ருக்­கும் உத­வும் 'அடோப்ட் எட் சவுத் வெஸ்ட்' திட்­டத்­தின்­கீழ் முயற்சி எடுக்­கப்­ப­டு­கிறது.

60 வெள்ளி வரை மதிப்­புள்ள பொருட்­க­ளைப் பெற குடி­யி­ருப்­பா­ளர்­கள் கோரிக்கை வைக்­க­லாம். வீட்­டுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள், சிறு­வர் விளை­யாட்­டுப் பொருட்­கள் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

முயற்­சி­யின் தொடக்க விழா­வில் அதி­பர் ஹலிமா யாக்­கோப். தென்­மேற்கு வட்­டா­ரத்­தின் மேயர் லோ யென் லிங் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர். இரு­வ­ரும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அவர்­கள் பெற விரும்­பிய பொருட்­களை வழங்­கி­னர்.

கொவிட்-19 சூழ­லால் பலர், குறிப்­பாக வய­தா­னோர், தனி­யா­லும் மன­வு­ளைச்­ச­லா­லும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதே வேளை­யில் இது­போன்ற நேரத்­தில்­தான் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உதவி செய்­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே உள்ள ஒற்­று­மையை உண­ர­ முடி­யும் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை மற்­றும் வர்த்­தக, தொழில் துறை ஆகி­ய­வற்­றுக்­கான துணை­ய­மைச்­ச­ரு­மான திரு­வாட்டி லோ கூறி­னார்.

நிறு­வ­னங்­களும் பொது­மக்­களும் மொத்­தம் 180,000 வெள்ளி மதிப்­புள்ள பொருட்­களை நன்கொடை­யாக வழங்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!