வருவாய், உற்பத்தித்திறன் அதிகரிப்பு: ஆய்வு

ஊழியர்களைப் பயிற்சிக்கு அனுப்பும் தொழில் நிறுவனங்களுக்கு நற்பலன்

தங்­க­ளது ஊழி­யர்­களை மறு­தி­றன் பயிற்­சிக்கு அனுப்­பும் தொழில் நிறு­வ­னங்­களின் வரு­வாய் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்­பும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் இணைந்து நடத்­திய புதிய ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யில் ஒவ்­வொரு 10 விழுக்­காட்­டி­ன­ரை­யும் பயிற்­சிக்கு அனுப்­பும் நிறு­வ­னங்­களின் வரு­வாய் ஒவ்­வோர் ஆண்­டும் சரா­ச­ரி­யாக 0.7 விழுக்­காடு உயர்ந்­த­தாக ஆய்வு கண்­ட­றிந்­தது. ஊழி­யர்­க­ளின் பயிற்­சிக்­குப் பிறகு மூன்று ஆண்­டு­கள் வரை இந்த வரு­வாய் உயர்வு நீடித்­தது.

நிறு­வ­னங்­க­ளின் தொழி­லா­ளர் உற்­பத்­தி­யும் ஆண்­டிற்கு சரா­ச­ரி­யாக 2.2 விழுக்­காடு உயர்ந்­தது. இந்த உற்­பத்தி அதி­க­ரிப்பு ஈராண்­டு­க­ளுக்கு நீடித்­தது.

2010க்கும் 2018ஆம் ஆண்­டிற்­கும் இடைப்­பட்ட காலத்­தில், ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு ஆத­ரிக்­கும் பயிற்­சிக்கு தங்­க­ளது உள்­ளூர் ஊழி­யர்­களை அனுப்­பும் நிறு­வ­னங்­க­ளுக்­குக் கிடைத்த பலன்­களை ஆய்வு கண்­ட­றிந்­தது.

இதன் தொடர்­பில் நேற்று நடை­பெற்ற கருத்­த­ரங்கு ஒன்­றில் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் மாதத்தை தொடங்­கி­வைத்து பேசிய கல்வி துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங், வலு­வான தொழில் நிறு­வ­னங்­க­ளை­யும் விரைந்து செயல்­படும் ஊழி­ய­ர­ணி­யை­யும் உரு­வாக்­கு­வதில் வாழ்­நாள் கற்­றல் முக்­கி­யம் என்று வலி­யு­றுத்­தி­னார்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி முடி­வ­டை­யும் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் மாதத்­தில், மெய்­நி­கர் வழி­யா­க­வும் நேருக்கு நேராக நடத்­தப்­படும் 50க்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­றும்.

இந்த நிகழ்ச்­சி­யில் 90க்கும் மேற்­பட்ட சமூக, கல்வி, தொழில்­துறை பங்­கா­ளி­கள் பங்­கேற்­கின்­றன. இதில் 50,000க்கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொண்டு பலன்­பெ­று­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"இந்த ஆய்­வைப் பொறுத்­த­மட்­டில், ஊழி­யர்­க­ளின் திறன் மேம்­பாட்­டிற்கு ஆத­ர­வ­ளித்து அதில் தொழில் நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­யும்­போது, திற­னா­ளர்­களை ஈர்த்து அவர்­களை நிறு­வ­னங்­களில் தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­யும். மேலும், நிறு­வ­னங்­கள் தங்­க­ளது வரு­வாயை உயர்த்­த­வும் முடி­யும்," என்று திரு­மதி கான் கூறி­னார்.

"இந்த ஆய்­வின் முடி­வு­கள் ஊக்­க­ம­ளிக்­கின்­றன. ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தில் முத­லீடு செய்­வ­தால் நிறு­வ­னங்­க­ளுக்­குச் சிறந்த பலன்கள் ஏற்­ப­டு­கின்­றன என்­பதை ஆய்வு காட்­டு­கிறது," என்­றும் அவர் விவ­ரித்­தார்.

நாடு­கள், நிறு­வ­னங்­கள் இயங்­கும் முறை, தனி­ந­பர்­கள் வாழும் முறை ஆகி­யவை உரு­மாற கொவிட்-19 சூழல் ஒர் முக்­கிய கார­ண­மா­கத் திகழ்­வ­தாக திரு­மதி கான் குறிப்­பிட்­டார்.

"நமது ஊழி­ய­ரணி மறு­தி­றன் பயிற்­சி­யி­லும் திறன் மேம்­பாட்­டி­லும் தொடர்ந்து ஈடு­படுவது முன்­னெப்­போதையும்­விட முக்­கி­ய­மா­கிறது. அப்­போ­து­தான் தொடர்ந்து போட்­டித்­தன்­மை­யு­டன் விளங்கி புதிய இயல்­பு­நி­லை­யில் எதிர்­கால வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்ற முடி­யும்," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!