பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக 33 வயது மாது மீது குற்றச்சாட்டு

தம்­மி­டம் பணி­பு­ரிந்த இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண்னை வேண்­டும் என்றே காயப்­ப­டுத்­தி­யது, தம் முன்­னால் அவ­ரைக் குளிக்க வைத்து அவரை மான­பங்­கம் செய்­தது உள்­ளிட்ட கார­ணங்­க­ளுக்­காக 33 வயது சிங்­கப்­பூர் பெண்­மணி மீது ஆறு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

ரோஸ்­ட­யானா அப்­துல் ரஹீம் (படம்) எனும் அந்த மாது, திரு­வாட்டி மாயாங் சாரியை 2017ம் ஆண்­டில் துன்­பு­றுத்­தி­னார் என்று நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. பணிப்­பெண்­ணின் வயது குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

பணிப்­பெண் மீது துர்­நாற்­றம் அடித்­த­தா­கக் கூறி, கத­வைத் திறந்­து­வைத்து தமது முன்­னால் குளிக்­கும்­ப­டி­யும் பிறகு சன்­னல்­களை மூட­வி­டா­மல், ஆடை மாற்­றும்­ப­டி­யும் ரோஸ்­ட­யானா அவ­ரைக் கட்­டா­யப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

பக­லில் ரோஸ்­ட­யா­னா­வின் பிள்­ளை­களை அவ­ரது தாயா­ரின் வீட்­டில் கவ­னித்­துக் கொண்ட திரு­வாட்டி மாயாங் சாரி, இர­வில் வீடு திரும்­பி­ய­போ­தும் வீட்­டு­வேலை செய்­யக் கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­டார். அவ­ருக்கு விடுப்போ பக­லில் ஓய்வு நேரமோ அளிக்­கப்­ப­ட­வில்லை. ரோஸ்­ட­யா­னா­வின் குடும்­பத்­தி­னர் அவ­ரைக் கணி­கா­ணித்த வண்­ணம் இருந்­த­னர்.

மேலும், பணிப்­பெண்­ணின் முகத்­தில் பூசு­மாவு கொட்டி அவர் கண்­களை எரி­யச் செய்­தது, அவ­ரது குடும்­பத்­துக்கு ஆபத்து விளை­விக்­கப் போவ­தாக மிரட்­டி­யது, அவ­ரது பிறப்பு உறுப்­பில் உதைத்­தது போன்­வற்­றை­யும் ரோஸ்­ட­யானா செய்­தார் என்­றும் நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது. ரோஸ்­ட­யா­னா­வுக்கு ஆகஸ்ட் 17 அன்று தண்­டனை விதிக்­கப்­படும். திரு­வாட்டி மாயாங்கை மான­பங்­கம் செய்­த­தற்­காக அவ­ருக்கு ஒன்­றரை ஆண்டு சிறை, அல்­லது அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். அவ­ரைக் காயப்­ப­டுத்­தி­ய­தற்­காக அவ­ருக்கு அதி­க­பட்­ச­மாக மூன்று ஆண்டு சிறைத் தண்­டனை, அல்­லது $7,500 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!