சிங்கப்பூரும் தாய்லாந்தும் உடன்பாட்டில் கையெழுத்து

மின்னிலக்கப் பொருளியல் துறையில் தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூரும் தாய்லாந்தும் நேற்று மெய்நிகர் வழி புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன.

சிங்கப்பூர் சார்பில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோவும் தாய்லாந்து சார்பில் அதன் மின்னிலக்க பொருளியல் சமூக அமைச்சர் திரு சைவாட் தனக்காமனுசோர்னும் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்பாட்டின் மூலம், மின்னிலக்க இணைப்பை மேம்படுத்துதல், எல்லை தாண்டிய தரவு பரிமாற்றத்தைப் பலப்படுத்துதல், தொழில்நுட்பத் திறனாளர்களை வளர்த்தல், மனிதவளத்தை அதிகரித்தல் போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் செயற்கை நுண்ணறிவு, ஐந்தாம் தலைமுறை கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் ஒத்துழைப்பை உருவாக்க இரு தரப்பும் ஆராய்ந்து வருகின்றன.

"இந்த உடன்பாடு சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால அணுக்கமான உறவுக்கு புதிய மைல்கல்லாக விளங்கும். சிங்கப்பூரைப் போல தாய்லாந்தும் மின்னிலக்க முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை காட்டும் முக்கியமான பங்காளி.

"தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கும் மின்னிலக்கப் பொருளியலை மையமாகக் கொண்டு சமுதாயத்தை உருவாக்க இரு நாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளன.

"இந்தக் கடப்பாட்டால் இரு நாட்டு மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் மேம்படும்," என்றார் அமைச்சர் டியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!