புகைப்படங்கள் எடுத்துக்காட்டும் கடல் உயிரினங்களின் வேதனை

இந்து இளங்­கோ­வன்

மனி­தச் செயல்­பா­டு­க­ளால் அதி­கம் பாதிப்­ப­டை­கின்ற இடங்­களில் கட­லும் ஒன்று. உல­கின் எந்த மூலை­யில் தூக்கி வீசப்­படும் கழி­வும் கடை­சி­யில் சென்று சேரு­கின்ற இடம் கடல்­தான்.

இதை எடுத்­து­ரைக்­கிறது நெட்­ஃபி­ளிக்ஸ் செய­லி­யில் இடம்­பெற்­றுள்ள ‘சீஸி­பி­ரசி’ எனும் பிர­பல ஆவ­ணப்­ப­டம். இதைப் பார்த்து தமக்கு ஏற்­பட்ட மன­வே­த­னை­யால் மீன் வகை­களை உண்­ணு­வதை நிறுத்­திக் கொண்­டார் 22 வயது காயத்­திரி காந்தி.

கட­லில் பெரு­கும் பிளாஸ்­டிக் கழி­வு­கள், அள­வுக்கு அதி­க­மான மீன் பிடித்­தல் போன்ற வழி­களில் கடல் உயி­ரி­னங்­க­ளுக்கு மனி­தர்­கள் செய்­யும் கேடு­களை ‘சீஸி­பி­ரசி’ (‘Seaspiracy”) ஆவ­ணப்­ப­டம் ஆராய்­கிறது.

அத்­து­டன், கடல்­சார் சுற்­றுச் சூழல் அழி­வின் முக்­கிய கார­ணம் பெரு­வ­ணிக மீன்­பி­டிப்­புத் தொழில் தான் எனும் வாதத்தை முன்­வைத்து மீன் உண்­ணும் பழக்­கத்­தைக் ைகவி­டு­மாறு அது ஊக்­கு­விக்­கிறது.

அந்த ஆவ­ணத் தொடர்­தான் ஒரு புகைப்­ப­டத் தொடரை உரு­வாக்க காயத்­தி­ரிக்கு தூண்டு கோலாக அமைந்­தது.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் அர­சி­யல் ஆய்­வுத் துறை­யில் பயின்­று­வ­ரும் காயத்­திரி இந்த பிரச்­சினை பற்­றிய விழிப்­பு­ணர்வை சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் தமது நண்­பர் ஹம்­ச­வள்ளி துரை­ரா­ஜு­வு­டன் இணைந்து ஒரு புகைப்­ப­டத் தொடரை உரு­வாக்­கி­யுள்­ளார். மனி­தர்­க­ளின் செயல்­க­ளால் கடல் உயி­ரி­னங்­கள் படும் வேத­னையைச் சித்­திரிக்­கின்­றன இந்­தப் புகைப்­ப­டங்­கள். புகைப்­ப­டங்­களில் பிளாஸ்­டிக் குப்­பை­களில் சிக்­கித் தவிக்­கும் உயி­ரி­ன­மாகக் காட்சி அளிக்­கி­றார் காயத்­திரி.

“பெருங்­க­டல்­கள் நமது பூமி­யின் உயிர்­நாடி. பூமி­யின் பரு­வ­நி­லையை சீராக்க அவை உத­வு­கின்­றன. நாம் ஒரு முறை பயன்­ப­டுத்­தும் பிளாஸ்­டிக்­கின் பாதிப்பு பல்­லாண்­டு­கள் நீடிக்­கும். கடலை மாசு­ப­டுத்­தும் பிளாஸ்­டிக்­கில் மீன்­பிடி வலை­கள் 10% ஆகும். அவை எண்­ணற்ற மீன்­கள், கடல் உயி­ரி­னங்­க­ளின் அழி­விற்­குக் கார­ண­மா­கின்­றன.

“மனி­தர்­க­ளுக்கு இவ்­வாறு நடந்­தால் நாம் எத்­த­கைய வலியை உண­ரு­வோமோ அது­போ­லத்­தான் கடல் உயி­ரி­னங்­க­ளுக்­கும் எனும் கருத்தை எங்­க­ளது புகைப்­ப­டங்­கள் மூலம் சித்­திரிக்க முயன்­றுள்­ளோம்,” என்­றார் காயத்­திரி.

பிளாஸ்­டிக் பயன்­ப­டுத்­து­வ­தால் ஏற்­படும் கேடு­கள் போன்ற அடிப்­ப­டைச் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புத் தக­வல்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு, கடல் உயி­ரி­னங்­களை அள­வுக்கு அதி­க­மாகப் பிடிப்­ப­தா­லும் உட்­கொள்­வ­தா­லும் ஏற்­படும் பாதிப்­பு­கள் பற்­றி­யும் நாம் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்று கருது கிறார் காயத்­திரி.

தமிழ் சார்ந்த நட­வ­டிக்­கை­களில் ஆர்­வம் செலுத்­தி­வ­ரும் கயாத்­திரி, புகைப்­பட, காணொளி தொகுப்­பாக்­கத்­தில் அதிக ஈடு­பாடு கொண்­டுள்­ளார். தொடர்ந்து தமது திறன்­களை பய­னுள்ள வழி­களில் வெளிப்­ப­டுத்த விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

புகைப்­ப­டங்­களை எடுத்­த­வர் புகைப்­ப­ட­க் க­லை­ஞர் ஹம்­ச­வள்ளி துரை­ராஜு, 26. புகைப்­படங்­க­ளின் வழி காட்­சி­களை உரு­வாக்கி அதன் மூலம் கதை­சொல்­வதே இவ­ரின் தனித்­து­வம். 13 வய­தி­லி­ருந்தே புகைப்­படக் கலை­யில் ஆர்­வம் செலுத்­தி­வ­ரும் இவ­ரின் புகைப்­படப் படைப்­பு­கள் யாவும் பெண்­களை மைய­மாக கொண்டவை.

இந்தப் புகை­ப­டப்­ பி­டிப்­பிற்குத் தயார் செய்ய, கடல் உயிரினப் பிரச்­சினையைப் பற்­றி ஆராய்ச்சி செய்து பிரச்­சினை­யின் ஆழத்தை உணர்ந்­த­ பின்னரே புகைப்­ப­டங்­களை எடுத்­த­தாகக் கூறி­னார் ஹம்­ச­வள்ளி.

“எனது புகைப்­படக் காட்­சி­கள், பார்ப்­போ­ரின் உணர்வுகளைத் தூண்­டும் விதத்­தில் மிக இயல்­பா­க­வும் தத்­ரூ­ப­மா­க­வும் ஆழ­மான கருத்­து­களை வெளிப்­ப­டுத்­தும் வகை­யிலும் அமை­ய­ வேண்­டும் என்­பது எனது எண்­ணம்.

“கடல் உயி­ரின அழிவைப் பற்றி காயத்­தி­ரி­யு­டன் உரை­யா­டும்­போது நான் பல­முறை சென்­றி­ருந்த ஒரு குறிப்­பிட்ட இடம் நினை­விற்கு வந்­தது. இந்தக் குறிப்­பிட்ட இடத்­திலே நான் நடந்து செல்­லும் ஒவ்­வொரு முறை­யும் நான் மிக­வும் சங்­க­ட­மா­க­வும் வருத்­த­மா­க­வும் உணர்ந்த தரு­ணங்­கள் நினை­வில் நிற்­கின்றன. அங்கே அலை­கள் கரையை தொடும் பகு­தி­யில் எண்­ணெய் நிரம்பி இருந்­தது. இதைப் பார்த்து என்­னுள் குற்ற உணர்வு ஏற்­பட்­டது. பல நேரங்­களில் நம்­மு­டைய செயல்­கள் பிற உயி­ரி­னங்­களை எவ்­வாறு பாதிக்­கின்­றன என்­பதை நாம் அறிந்­தி­ருப்­ப­தில்லை,” என்­றார் ஹம்­ச­வள்ளி.

புகைப்­ப­டங்­களைக் காண தமிழ் முர­சின் இன்ஸ்­டகி­ராம் பக்­கத்தை நாடுங்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!