இளையர்களிடம் துளிர்விடும் இலக்கிய ஆர்வம்

நீ ஆன் பல­து­றைத் தொழில்­கல்­லூ­ரி­யில் தமிழ்க் கல்­வி­யு­டன் கூடிய ஆரம்­ப­கா­ல பட்­ட­யக் கல்வி பயின்­று­வ­ரும் சபின் சாரா, 22, இவ்­வாண்­டின் வாசிப்பு விழா­வில் தொடர்ந்து நான்கு நிகழ்ச்­சி­களில் பங்­கு­பெற்ற பின்­னர் தமிழ் இலக்­கி­யம் மீதான ஆர்­வம் தம்­முள் வளர்ந்­துள்­ள­தா­கக் கூறு­கி­றார்.

விழா­வின் முதல் வாரத்­தில் சிறப்பு எழுத்­தா­ளர் கபி­லன் வைர­முத்­து­வின் தலைமை உரை­யைக் கேட்ட பின்­னர், உட­ன­டி­யாக அவர் எழு­திய ‘மெய்­நி­கரி’ நூலை இர­வல் பெற்று வாசிக்க ஆர்­வம் ஏற்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

சபின் போன்றே பல இளை­யர்­கள் இவ்­வாண்டு வாசிப்பு விழா­வில் பங்­கேற்­பா­ளர்­க­ளா­க­வும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்­க­ளா­க­வும் கலந்­து­கொண்­ட­னர்.

இளைய சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் புத்­த­கம் படிக்­கும் பழக்­கத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் இந்த ஆண்டு வாசிப்பு விழா­வில் பல மெய்­நி­கர், நேரடி நிகழ்ச்­சி­கள் அரங்­கே­றின.

கடந்த 18-ஆம் தேதி ஞாயிறு அன்று தேசிய நூலக வாரி­யத்­தில் வாசிப்பு விழா­வின் இறுதி தமிழ் நிகழ்­வான, ‘சிறு­க­தை­யி­லி­ருந்து திரைக்­கதை, வச­னம் உரு­வாக்­கு­தல்’ எனும் பயி­ல­ரங்கு நடை­பெற்­றது.

உள்­ளூர் மேடை நாட­க­விய லாள­ரும் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ள­ரும் இயக்­கு­ன­ரு­மான திரு சலீம் ஹாடி அதனை வழி நடத்­தி­னார்.

அந்த நேரடி நிகழ்­வில் ஒரு சிறு­க­தை­யைத் திரைக்­க­தை­யா­க­வும் வச­ன­மா­க­வும் வடி­வ­மைத்து எழு­து­வ­தன் அடிப்­ப­டைக் குறிப்­பு­களை அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

மொத்­தம் 24 இளை­யர்­கள் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

மறைந்த எழுத்­தா­ள­ரர் சுஜா­தா­வின் ‘நக­ரம்’ சிறு­கதை, புகழ்­பெற்ற எழுத்­தா­ள­ரான ஜெய­மோ­க­னின் ‘அறம்’ சிறு­க­தைத் தொகுப்­பில் உள்ள சிறு­க­தை­கள் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி பயி­ல­ரங்கு நடத்­தப்­பட்­டது.

இளை­யர்­கள் சிறு­க­தை­க­ளைப் படித்­த­பின் அவர்­க­ளது புரி­த­லுக்கு ஏற்ப காட்­சி­க­ளை­யும் பின்­னர் கதாப்­பாத்­தி­ரங்­க­ளுக்­கான வச­னங்­க­ளை­யும் உரு­வாக்­கி­னர்.

“இளை­யர்­கள் நிறைய புத்­த­கங்­கள் படித்­தால்­தான் அவர்­க­ளது கற்­ப­னைத் திறன் வள­ரும். இளம் வய­தில் போதிய அனு­ப­வங்­கள் இல்­லா­வி­டி­லும் படித்த புத்­த­கங்­

க­ளி­லி­ருந்து உள்­வாங்­கிக் கொண்ட கருத்­து­க­ளைத் தூண்­டு­கோ­லா­கக் கொண்டு தங்­கள் படைப்­பு­களை அவர்­கள் உரு­வாக்­க­லாம்.

“புத்­த­கங்­கள் வழி எழுத்­தா­ள­ரின் பார்­வை­யில் கதா­பாத்­தி­ரங் களின் இயல்­பைப் புரிந்­து­கொள்­ள­மு­டி­யும்,” என்­றார் திரு சலீம்.

புத்­தக வடி­வில் பெறும் வேறொ­ரு­வ­ரின் சிந்­த­னை­கள், கற்­பனை களை ஆகி­ய­வற்றை நம்­முள் கொட்­டிக் கிடக்­கும் சிந்­த­னை­க­ளுடன் கலந்து எவ்வாறு தனித்­து­வ­மான திரைக்­க­தையை உரு­வாக்­கு­வது என்பதை உணர்ந்­து­கொண்­ட­தாக கூறிய பிர­காஷ், 21, தாமும் கூடிய விரை­வில் ஒரு குறும்­ப­டத்தை எடுக்க ஊக்­கம் பெற்­றி­ருப்­ப­தா­கச் சொன்­னார்.

வாசிப்பு விழா­வில் தாம் கலந்­து­கொண்ட மற்ற நிகழ்­வு­களை காட்­டி­லும் சற்று வித்­தி­யா­ச­மாக திரைக்­கதை உரு­வாக்­கத்தை மைய­மாக கொண்­டி­ருந்­த காரணத்தால் இந்­நி­கழ்வு தம்­மைக் கவர்ந்­த­தாக இவர் கூறி­னார்.

பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்ட மற்றொருவரான மீனா­ஸ்ரீ

சிவ­கு­மார், 19 சில குறும்படங்­களை எழுதி தயாராக வைத்­துள்­ளார்.

“சிறு­க­தை­களை வேறு வடி­வத்­தில் மாற்றி அமைத்து நல்ல திரைக் ­க­தை­யு­டன் திரைப்படங்களா­கத் தயா­ரிக்­க­லாம் என்­பதை இந்­நி­கழ்­வின் வழி தெரிந்­து­கொண்­டேன்,

“மெய்­நி­கரி நாவ­லி­லி­ருந்­து­தான் ‘கவண்’ திரைப்­ப­டம் உரு­வா­னது என்­பது எனக்கு இதற்கு முன்பு தெரி­யாது. ஏற்­கெ­னவே வெளி­வந்துள்ள சிறு­க­தையை மீண்­டும் பட­மாக்குவதில் சுவா­ர­சி­யம் இல்லை என்று நினைத்­தேன்.

“ஆனால் கூடிய விரை­வில் ஒரு சிறு­கதை­யைக் கரு­வா­கக் கொண்டு குறும்­படத்தை தயா­ரிக்க ஆர்­வம் பிறந்­துள்­ளது,” என்றார் அவர்.

அத்­து­டன் சிங்­கப்­பூ­ரில் நிறைய சிறு­க­தை­கள் எழு­தப்­பட்­டுள்­ளது வாசிப்பு விழா­வின் மூலம்­தான் தமக்­குத் தெரி­ய­வந்­ததாகக் கூறினார் மீனா­ஸ்ரீ.

- செய்தி: இந்து இளங்கோவன்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!