‘நெருக்கடியை வாய்ப்பாக மாற்ற வேண்டும்’

கொவிட்-19 நோய்ப் பர­வல் கிட்­டத்­தட்ட உல­கின் எல்­லாப் பொரு­ளி­யல்­கள்­மீ­தும் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­றும் சூழ­லுக்கு ஏற்ப, விரைந்து உரு­மா­றிக்­கொள்­பவை வலு­வாக மீண்டு எழுந்து, மற்ற நாடு­க­ளை­விட முன்­னே­றிச் செல்­லும் என்­றும் வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

“கொரோனா பர­வல் ஓய்ந்­த­பின் நாம் பின்­தங்­கி­வி­டா­மல் இருப்­பதை உறு­தி­செய்ய, தலை­மு­றைக்கு ஒரு­முறை ஏற்­படும் இந்த நெருக்­க­டி­யைத் தலை­மு­றைக்கு ஒரு­முறை கிட்­டும் வாய்ப்­பாக மாற்­றிக்­கொண்டு, நமது தொழில்­களை உரு­மாற்றி, புதிய வளர்ச்­சித் துறை­களை உரு­வாக்கி, உல­கப் பொரு­ளி­யல்­க­ளு­ட­னான நமது தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்,” என்று அமைச்­சர் கான் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று அமைச்­சர்­நிலை அறிக்­கை­யின்­போது கூறி­னார்.

தொழில்­து­றை­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­க­வும் வேலை­க­ளைப் பாது­காக்­க­வும் கடந்த ஒன்­றரை ஆண்­டு­களில் அர­சாங்­கம் எட்டு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­க­ளைத் தாக்­கல் செய்­துள்­ள­தாக திரு கான் குறிப்­பிட்­டார். நேற்று தாக்­கல் செய்­யப்­பட்ட துணை வழங்­கல் மசோ­தா­வும் அதி­ல­டங்­கும்.

வேலை ஆத­ர­வுத் திட்­டம், வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்குவிப்­புத் திட்­டம், வாடகை நிவா­ர­ணம், வரித் தள்­ளு­படி, நிறு­வன நிதி­யா­த­ர­வுத் திட்­டம் போன்ற திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. கட­னைக் காலந்­தாழ்த்­திச் செலுத்த வகை­செய்­ய­வும் அர­சாங்­கம் வங்கி­ க­ளு­டன் இணைந்து பணியற்றி­யது.

“நிறு­வ­னங்­கள் பெரும் சரிவை எதிர்­கொள்­வ­தை­யும் பேர­ள­வில் மந்­த­நிலை ஏற்­ப­டு­வ­தை­யும் வேலை­யின்மை விகி­தம் உயர்­வ­தை­யும் தவிர்க்க இந்­தத் திட்­டங்­கள் உத­வின,” என்­றார் அமைச்­சர் கான்.

இத்­திட்­டங்­கள் அவ­சி­ய­மா­ன­தா­க­வும் கைகொ­டுப்­ப­தா­க­வும் இருந்து வந்­தா­லும், இவை ‘தற்­கா­லிக வலி­நீக்கி’யாகவே இருக்க முடி­யும் என்­றும் திரு கான் கூறி­னார். மேலும், பொரு­ளி­யல் மீண்­டும் வளர்ச்சி காணும் வகை­யில் தங்­க­ளது தொழில்­களை மீண்­டும் முழு­மை­யா­கத் தொடங்க விரும்­பு­வ­தாக நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் அதி­கா­ரி­க­ளி­டம் சொன்­ன­தாக திரு கான் கூறி­னார்.

ஆத­லால், பல­ரும் தங்­க­ளது தொழில்­களை உரு­மாற்றி புதிய வாய்ப்­பு­களை நாடி வரு­வ­தா­க­வும் மீட்­சிக்­குத் தயா­ராகி வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

ஆனா­லும், அன்­றா­டச் சவால்­களை எதிர்­கொள்­வ­தும் உரு­மா­று­வ­தற்­குத் தேவை­யா­ன­வற்­றைச் செய்­வ­தும் நிறு­வ­னங்­க­ளுக்கு எளி­தாக இராது என்­பதை அவர் ஒத்­துக்­கொண்­டார்.

அத­னால்­தான், கொவிட்-19 பர­வ­லுக்­குப் பிந்­திய சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் உத்­தி­களை ஆராய்­ வ­தற்­காக கடந்த ஆண்டு மே மாதம் ‘மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான பணிக்­குழு’ அமைக்­கப்­பட்­டது என்றார் அமைச்­சர் கான்.

இவ்­வாண்டு மே மாதம் அந்­தப் பணிக்­குழு தனது அறிக்­கையை வெளி­யிட்­டது. பொது-தனி­யார் துறை­கள் பங்­கா­ளித்­து­வத்­து­டன் அது அமைத்த ஒன்­பது செயற்­கூட்­ட­ணி­கள் நம்­பிக்கை அளிக்­கும்­ப­டி­யான முடி­வு­களை வழங்கி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!