பேருந்து சேவைகளுக்கு இடையூறு இல்லை

கடந்த ஜூலை 30ஆம் தேதி வரை­யி­லும், எட்டு பேருந்து ஓட்­டு­நர்­ க­ளுக்கு கொவிட்-19 கிரு­மி தொற்­றி­யுள்­ள­தாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யுள்­ளது.

அண்­மைய வாரங்­களில், தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­வர்­களு­டன் தொடர்­பிலிருந்த சில பேருந்து ஓட்­டு­நர்­க­ளுக்கு, இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது அல்­லது அவர்­கள் வேறு இடங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர் என்று அறி­வ­தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் நேற்று கூறி­யது.

இங்­குள்ள 9,500 பேருந்து ஓட்டுநர்­களில் ஒரு விழுக்­காட்­டுக்­குக் குறை­வா­னவர்­கள்­தான் தனி­மைப்­ப­டுத்­து­தலால் பாதிக்­கப்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்த போது ஆணை­யம் கூறி­யது.

மேலும், பேருந்து செயல்­பாடு களுக்கு இடை­யூறு ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்றும் அது கூறியது.

எனி­னும் எத்­தனை பேருந்து ஓட்­டு­நர்­க­ளுக்­கு கிரு­மித்தொற்று ஏற்­பட்­டது என்­றும் உறு­தி­செய்­யப்­பட்ட தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஒன்­று­டன் ஒன்று தொடர்­புள்­ள­வையா என்­றும் அது தெரி­விக்­க­வில்லை,

பேருந்து ஓட்­டு­நர்­களில் 99 விழுக்காட்டுக்கு அதி­க­மா­ன­வர்­கள் தங்கள் முதலாவது தடுப்­பூ­சி­யைப் போட்டுக்கொண்­டுள்­ள­னர் என்­றும் ஆணை­யம் கூறி­யது.

கொரோனா தொற்­றுக்­கு­ழு­மங்­கள் தற்­போது ஏற்பட்டிருக்­கும் இடங்­க­ளுக்கு அருகே பணி­செய்­யும் தங்கள் ஊழி­யர்­க­ளுக்குப் பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் முன்­வந்து விரை­வுப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஆணை­யம் கூறி­யது. தொற்­றுச் சம்­ப­வங்­களை விரை­வா­கக் கண்­ட­றி­வது அதன் நோக்­க­மா­கும்.

"ஊழி­யர்­க­ளுக்­கும் பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்­கு­மான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் கடு­மை­யாகக் கடைப்பி­டிக்­கப்­ப­டு­வதை உறுதிசெய்யப் பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங் ­க­ளு­டன் சேர்ந்து பணி­யாற்­று­வோம்," என்­றது ஆணை­யம்.

அத்­து­டன், பொதுப் போக்­கு ­வ­ரத்து முனை­யங்­க­ளுக்­கும் வாக­னங்­க­ளுக்­கும் மேற்­கொள்­ளப்­படும் அன்­றாடச் சுத்திகரிப்புப் பணியை பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­கள் தொட­ரும் என்­றும் ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!