மின்சாரத்தில் ஓடும் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் எஸ்எம்ஆர்டி

போக்­கு­வ­ரத்­துக் குழு­ம­மான எஸ்­எம்­ஆர்டி இம்­மா­தத்­தில் தனது முதல் தொகுதி மின்­சார டாக்­சி­களை விரை­வில் சாலை­யில் இறக்­க­வுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் மூன்­றா­வது பெரிய டாக்சி சேவை நிறு­வ­ன­மான எஸ்­எம்­ஆர்டி ஏறத்தாழ 1,780 டாக்­சி­களைக் கொண்­டி­ருக்­கிறது. இந்­நி­லை­யில், சீனா­வில் தயா­ரிக்­கப்­படும் 300 எம்ஜி 5 ரக டாக்­சி­களை அந்­நி­று­வ­னம் வாங்­க­வி­ருக்­கிறது.

யூரோ­கார்ஸ் நிறு­வ­னம் அந்த டாக்­சி­களை விநி­யோ­கித்து வரு­கிறது. இந்த ஒப்­பந்­தத்­தின் மதிப்பு கிட்­டத்­தட்ட $30 மில்­லி­ய­னாக இருக்­க­லாம் எனக் கூறப்படுகிறது.

மின்­சார டாக்­சி­க­ளுக்கு மாற ஓட்­டு­நர்­களை ஊக்­கு­விக்­கும் வித­மாக வாட­கையை எஸ்­எம்­ஆர்டி குறைக்­கும் என அறி­யப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரி­வித்­தது. அத்­து­டன், கட்­ட­ண­மும் அத­னு­டைய 'பெட்ரோல்-மின்சார' டொயோட்டா டாக்­சி­ கட்­ட­ணத்­தை­விட சற்றுக் குறை­வாக இருக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மின்­க­லத்­தின் துணை­யு­டன் இயங்­கும் அந்த டாக்­சி­கள் இம்­மா­தப் பிற்­ப­கு­தி­யில் இருந்து படிப்­படி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

ஒருமுறை மின்னூட்டம் செய்தால் எம்ஜி 5 ரக டாக்சி 400 கி.மீ. ஓடும். விரைவு மின்னூட்டி மூலம் 40 நிமிடங்களில் 80% மின்னூட்டம் செய்துவிடலாம்.

வரும் 2026ஆம் ஆண்­டிற்­குள் அனைத்து டாக்­சி­க­ளை­யும் மின்­சா­ரத்­தில் இயங்­கு­ப­வை­யாக மாற்ற எஸ்­எம்­ஆர்டி இலக்கு கொண்­டு இருக்கிறது.

சிங்­கப்­பூ­ரில் 2025ஆம் ஆண்டு முதல் டீச­லில் இயங்­கும் கார்­களை­யும் டாக்­சி­க­ளை­யும் பதி­வு­செய்ய முடி­யாது. 2040ஆம் ஆண்டு முதல் எரி­பொ­ரு­ளில் ஓடும் கார்­க­ளுக்­கும் டாக்­சி­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!