கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வருகை; நான்கு அம்சங்களில் கவனம்

அமெ­ரிக்­கத் துணை அதி­பர் கமலா ஹாரிஸ் சிங்­கப்­பூர் வரும் நிலை­யில் நான்கு முக்­கிய அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தப்­படும் என்று கூறி­னார் வெளி­யு­றவு அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ரு­‌ஷ்­ணன்.

பெருந்தொற்றுச் சூழ­லில் ‘டெல்டா’ வகைக் கிரு­மி­யின் உட­னடி தாக்­கத்தை அண்டை நாடு­களும் இந்த வட்­டா­ரத்­தில் உள்ள நாடு­களும் சமா­ளிக்க உத­வு­வது, மின்­னி­லக்கப் பொரு­ளி­யல், பசுமைப் பொரு­ளி­யல், பாது­காப்பு தொடர்­பான அம்­சங்­கள் ஆகியவற்றை அமைச்­சர் பட்­டி­ய­லிட்­டார். இவ்­வார இறு­தி­யில் இடம் பெறவுள்ள அமெரிக்க துணை அதி­பர் ஹாரி­ஸின் வரு­கைக்கு முன்­னோட்­ட­மாக டாக்டர் விவியன் செய்தியா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.

அமெ­ரிக்­கா­வும் சிங்­கப்­பூ­ரும் 55 ஆண்­டு­கால நட்­பு­ற­வைக் கொண்­டா­டும் இத்தரு­ணத்­தில் அத்தொடர்பை எவ்­வாறு வலுப்­படுத்­த­லாம் என்ற தமிழ் முரசின் கேள்­விக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லில் ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து ஆகிய நாடு­க­ளு­டன் சிங்­கப்­பூர் இணக்­கம் கண்­டுள்ள நிலை­யில் இந்த வளர்ந்­து­வ­ரும் கட்­ட­மைப்­பில் அமெ­ரிக்கா எவ்­வாறு அங்­கம் வகிக்க முடி­யும் என்­பது குறித்து ஆரா­யப்­படும் என்­றார் அமைச்­சர். பரு­வ­நிலை மாற்­றம் மிகுந்த அக்­க­றைக்­கு­ரிய அம்­ச­மாக உள்­ள­தால் பசு­மைப் பொரு­ளி­யல் குறித்து ஆலோ­சிக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

மேலும் பசு­மை­யான, நீடித்த நிலைத்­தன்மையான பொரு­ளி­ய­லுக்­குத் துரி­த­மா­க மாறுவதற்கு செல்ல உல­க­ளா­விய திட்­டங்­கள் உட்­பட வாய்ப்­பு­கள் ஆரா­யப்­படும்.

மின்­னி­லக்­கப் பொரு­ளி­ய­லின் வளர்ச்­சி­யால் இணை­யப் பாது­காப்பு மேலும் அவ­சி­ய­மா­கிறது. அந்த அம்­சத்­தி­லும் மேலும் இணக்­கம் காண விரும்­பு­வ­தாக டாக்டர் விவியன் சொன்­னார்.

அமெ­ரிக்­கத் துணை அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்­ற­பின் அமெ­ரிக்­கக் கண்­டத்துக்கு அப்பால் தமது முதல் அதி­கா­ர­பூர்வ வெளி­யு­ற­வுப் பயணத்­தின் முதல் இட­மாக சிங்­கப்­பூ­ருக்கு இம்­மா­தம் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை வரு­கைத் தர இருக்­கி­றார் கமலா ஹாரிஸ்.

சிங்­கப்­பூர், வியட்­னாம் இரு நாடு­க­ளுக்­கும் வரு­கைத் தரும் அவர், வியட்­னம் நாட்­டிற்­குப் பய­ணம் செய்­யும் முதல் அமெ­ரிக்­கத் துணை அதி­பர் எனும் சிறப்­பை­யும் பெறு­கி­றார். சிங்­கப்­பூர் அமெ­ரிக்கா இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யான நட்­பு­றவை பறை­சாற்­றும் வித­மாக அவ­ரது வருகை அமை­கிறது. இரு நாடு­களும் பொரு­ளி­யல், தற்­காப்பு, மக்கள் தொடர்பு அம்­சங்­களில் ஆழ­மான, விரி­வான தொடர்­பு­களைக் கொண்டுள்ளன.

இரு நாட்­டுத் தலை­வர்­க­ளின் உயர்­மட்ட சந்­திப்­பு­கள் அதிக எண்­ணிக்­கை­யில் நடந்­து­வந்­துள்­ளன. அமெ­ரிக்கா முதல் தடை­யற்ற வர்த்­தக உடன்­பாட்டைச் செய்து கொண்ட முதல் நாடு சிங்­கப்­பூ­ர் ஆகும்.

கடந்த 2004ஆம் ஆண்டு இரு நாடு­க­ளுக்­கி­டையே நடப்­பிற்கு வந்த அந்த உடன்­பாட்­டால் பொருள், சேவை வர்த்­த­கம் இரு மடங்­காக உயர்ந்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய வெளி­நாட்டு நேரடி முத­லீட்­டா­ளர் அமெ­ரிக்கா. மொத்­தம் 5,000க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­டு­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!