தேசிய தேர்வுகள்: அதிக மாணவர்களை அனுமதிக்க பரிசோதனை ஏற்பாட்டில் மாற்றம்

கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­வர்­களு­டன் அணுக்க தொடர்­பில் இருந்­த­தற்­காக விடுப்­பில் அனுப்­பப்­பட்­டுள்ள மாண­வர்­க­ளுக்கு விரைவு பரி­சோ­த­னை­யில் தொற்று இல்லை என்று தெரி­ய­வந்­தால் அவர்­கள் தேசிய தேர்­வு­களை எழுத அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள். அவர்­கள் தனிமை உத்­த­ர­வுக்­காக காத்­தி­ருப்­போ­ராக இருக்­கக்­கூ­டாது.

அத்­த­கைய மாண­வர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள விடு­முறைக் காலம் வரை, இரண்டு நாட்­க­ளுக்கு ஒருமுறை பள்­ளிக்­கூ­டத்­தில் அல்லது தேர்வு இடத்­தில் மாண­வர்­கள் அந்­தப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­ட­வேண்­டும்.

மாண­வர்­கள், ஊழி­யர்­கள் அனை­வ­ரின் பாது­காப்­பை­யும் உறு­திப்­ப­டுத்­தும் அதே­வே­ளை­யில், கூடு­மா­ன­வரை அதிக மாண­வர்­களைத் தேர்வு எழுத அனு­ம­திப்­பதற்­காக இந்த ஏற்­பா­டு­கள் இடம்­பெ­று­வ­தாக கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்வு, மதிப்­பீட்­டுக் கழ­க­மும் தெரி­வித்­தன. முக்­கிய பாடங்­க­ளுக்­கான தேசிய ஆண்டு இறுதி எழுத்­துத் தேர்­வு­கள் செப்­டம்­பர் 15ஆம் தேதி தொடங்­கு­கின்­றன. ஜிசிஇ சாதா­ரண நிலை தேர்வு­ தொடங்கி, ஜிசிஇ ஏ நிலை தேர்­வு­டன் அவை முடி­யும்.

மாண­வர்­கள் வீட்­டில் சுய­ப­ரி­சோ­த­னையை செய்துகொண்டு அதன் முடிவு பற்றி, தேர்­வுக்கு முன்­ன­தாக தங்­கள் பள்­ளிக்­கூ­டத்­தில் தெரி­விக்­க­வேண்­டும் என்று இந்த இரண்டு அமைப்­பு­களும் தெரி­வித்­துள்­ளன.

ஏற்றுக்கொள்ளக்கூடிய கார­ணங்­க­ளால் தேசிய தேர்­வு­களை எழுத முடி­யா­த­வர்­கள் சிறப்பு பரி­சீ­லனைக்காக விண்­ணப்­பிக்­க­லாம் என்று அமைச்­சும் இந்­தக் கழ­க­மும் தெரி­வித்­தன. பள்­ளிக்­கூ­டங்­க­ளி­லும் தேர்வு இடங்­க­ளி­லும் பாது­காப்பு நடை­மு­றை­கள் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!