அவாண்ட்: 20 ஆண்டு நிறைவை ஒட்டி அரங்கேறும் அபிமன்யு

மகா­பா­ரத இதி­கா­சத்தை மைய­மாகக் கொண்டு மேடை­நா­ட­கங் களைப் படைப்­ப­தில் கடந்த 20 ஆண்­டு­க­ளாக பெயர்­பெற்­றுள்ள அவாண்ட் நாட­கக்­குழு, ஐந்­தா­வது முறை­யாக ஒரு மகா­பா­ர­தக் கதாப்­பாத்­தி­ரத்­தைச் சுற்­றி நாட­கத்­தைப் மேடையேற்றவுள்ளது.

அவாண்ட் நாட­கக்­ கு­ழு­வின் 20ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ‘அபி­மன்யு’ என்ற படைப்பு வரும் செப்­டம்­பர் 3,4 ஆம் தேதி­கள் மேடை­யேற்­றப்­படும்.

திரு க. செல்வா இயக்­கத்­தி­லும் முனை­வர் இள­வ­ழ­கன் முரு­கன் எழுத்­தி­லும் உரு­வா­கி­யுள்ள இந்நாட­கத்­தில் மொத்­தம் 18 கதாப்­பாத்­தி­ரங்­கள் உள்­ளன. அபிமன்யு தான் மையக் கதாபாத்திரம்.

மகா­பா­ர­தத்­தில் பஞ்ச பாண்­ட­வர்­களில் ஒரு­வ­ரான அர்­‌ஜு­ன­னுக்­கும் கிரு­‌ஷ்­ண­னின் சகோ­த­ரி­யான சுபத்­தி­ரைக்­கும் பிறந்த மகன்­தான் அபி­மன்யு.

இதி­கா­சத்­தில் இடம்­பெ­றும் குருச்­சேத்­தி­ரப் போரில் கௌ­ர­வர்­களை எதிர்த்து பாண்­ட­வர்­கள் 18 நாட்­க­ளாக போரி­டு­வார்கள். 13ஆம் நாளில் கௌர­வர்­கள் சக்­க­ர­வி­யூ­கம் என்ற போர் உத்­தியை அமைப்­பார்கள். அந்த அமைப்­பி­னுள் ஊடு­ரு­விச் செல்­லத் தெரிந்த மிகச்­சி­ல­ரில் இளம் வீரர் அபி­மன்­யு­வும் ஒரு­வர். ஆனால் அவ­ருக்கு அதி­ லிருந்து மீண்டு வெளிவர தெரி­யாது.

இறு­தி­யில் கவு­ர­வப் படை­யின் முக்­கிய வீரர்­கள் ஒன்­றா­கச் சேர்ந்து அவரை எதிர்த்­துப் போர்­பு­ரிய, அபி­மன்­யு­வும் மர­ணத்­தைத் தழு­வு­வார்.

“அபி­மன்­யு­வின் மர­ணத்­துக்­குப் பின்­னர் அவ­ரது பெற்­றோர், கிரு­‌ஷ்­ணன், திரௌ­பதி, கர்­ணன் போன்ற கதா­பாத்­தி­ரங்­க­ளின் மன­நிலை, அவர்­க­ளது கண்­ணோட்­டங்­கள், உணர்ச்­சி­கள் ஆகி­ய­வற்றை நாட­கத்­தில் சித்­திரிக்­கி­றோம்,” என்­றார் நாட­கத்­தின் துணை இயக்­கு­ந­ரான ஸ்ரீக­ணே‌ஷ் லக்ஷ்மி­நா­ரா­ய­ணன்,

அபி­மன்யு கதா­பாத்­தி­ரத்­தில் வீரம், அன்பு, பாசம், விவே­கம் போன்ற நற்­பண்­பு­கள் சித்­தி­ரிக்­கப் படு­வ­தால் அப்­பாத்­தி­ரம் மையப் படுத்­தப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

மேலும், போர் ஆயு­தங்­கள், நடி­கர்­க­ளின் ஆடை­கள், மேடை அலங்­கா­ரம் அனைத்­தும் தத்­ரூ­ப­மா­கக் காட்சி அளிக்­கும் வகை­யில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மூப்­ப­ரி­மாண வரை­கலை, காணொ­ளி­கள் போன்ற பல தொழில்­நுட்­பக் கூறு­களும் மேடை­ நா­ட­கத்­தில் இடம்­பெ­றும் என்று மேலும் சொன்­னார் 54 வயது திரு ஸ்ரீக­ணே‌ஷ்.

அவாண்ட் நாட­கக் ­கு­ழு­வு­டன் இது­வரை நான்கு படைப்­பு­களில் இணைந்து பணி­பு­ரிந்த திரு ஜே அஷி‌ஷ், அபி­மன்யு கதாப்­பாத்­தி­ரத்­தில் நடிப்­பார்.

“முன்­னணி கதா­பாத்­தி­ரத்­தில் முதல் முறை­யாக நடிக்­கி­றேன். பல கோணங்­க­ளி­லி­ருந்து அபி­மன்­யு­வைப் பற்றி ஆராய இந்த நாட­கம் வாய்ப்­ப­ளித்­துள்­ளது. அபி­மன்யு ஒரு மேடை ­நா­ட­கம் என்று மட்­டும் சொல்­வ­தை­ விட நேரடி இசை, முப்­ப­ரி­மாண காட்­சி­கள் கொண்ட ஒரு பிர­ம்மாண்ட நிகழ்ச்சி என­லாம்,” என்­றார் திரு அ‌ஷி‌ஷ், 23.

ஜாலான் புக்­கிட் மேரா பகு­தி­யில் அமைந்­தி­ருக்­கும் கேட்வே அரங்­கத்­தில் நாடகம் இடம்­பெ­றும்.

செப்­டம்­பர் 3ஆம் தேதி மாலை 7.30 மணி, செப்­டம்­பர் 4ஆம் தேதி பிற்பகல் 3 மணி, மாலை 7.30 மணி என்று மொத்­தம் மூன்று நிகழ்ச்­சி­கள் நடைபெறும்.

ஏறத்­தாழ இரண்டு மணி நேரம் நீடிக்­கும் ஒவ்­வொரு நிகழ்ச்­சி­யி­லும் கொவிட்-19 கட்­டு­பா­டு­க­ளுக்கு ஏற்ப அதி­க­பட்­ச­மாக 250 பேர் கலந்­து­கொள்­ள­லாம்.

கொவிட்-19 தடுப்­பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் முன்­கூட்­டியே பரி­சோ­த­னை செய்துகொள்ள நிகழ்ச்­சி­ தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்­ன­தாக அரங்­கத்­திற்கு வருமாறு ஏற்­பாட்­டுக் குழு கேட்­டுக்கொள்கிறது. முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்டோருக்கு இப்­ப­ரி­சோ­தனை தேவை­யில்லை.

நுழை­வுச்­சீட்­டு­களின் விலை $28 முதல் $32 வரை ஆகும்.

மாண­வர்­கள், முழு நேர தேசிய சேவை­யா­ளர்­கள், வேலை அனு­மதி சீட்டு உள்ள ஊழி­யர்­கள், மூத்த குடி­மக்­கள் ஆகி­யோ­ருக்கு சலுகை விலை­யில் $20 (கையா­ளுகை கட்­ட­ணமான $2 தவிர) நுழை­வுச்­சீட்டு­கள் கிடைக்­கும்.

நுழை­வுச்­சீட்­டு­களை www.sistic.com.sg/events/abimanyu0921 என்ற இணை­யத்­த­ளத்­தில் பெற­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!