பாலியல் துன்புறுத்தல்: பேத்திகளைக் குறிவைத்ததை ஒப்புக்கொண்டார்

பாலியல் துன்புறுத்தல்: பேத்திகளைக் குறிவைத்ததை ஒப்புக்கொண்டார்

1 mins read
93332d0b-7773-436a-9aa3-fa6112772d6e
-

பாலி­யல் ரீதி­யாக சிறு பிள்­ளை­களைக் குறி­வைப்­ப­வர் என்று அடை­யா­ளம் காணப்­பட்ட ஆட­வர் ஒரு­வர், தனது வளர்ப்பு மக­ளைச் சீர­ழித்­த­தற்­காக சிறைக்­குச் சென்­றார். அப்­போது அவ­ருக்கு 19 ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் 24 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன. 2013ல் அவர் விடு­த­லை­யா­னதை அடுத்து தன் அக்­கா­வின் வீட்­டில் தங்­கி­னார். அதே வீட்­டில் அந்த அக்­கா­வின் பேரப்­பிள்­ளை­களும் வசித்து வந்­த­னர்.

மூன்று ஆண்­டு­களில் மீண்­டும் தன் தீய செய­லில் ஈடு­பட்­டார் அந்த ஆட­வர். 9, 11 வய­து­க­ளு­டைய அந்­தச் சிறு­மிகளை பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­னார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மி­களில் இளை­ய­வர், வீடு திரும்­பா­மல் பின்­னர் போலி­சா­ரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­போது, ஆட­வர் செய்த குற்­றம் அம்­ப­ல­மா­னது.

தற்­போது 60 வய­து­டைய அந்த ஆட­வர், தன் மீதான இரண்டு குற்­றச்­சாட்­டு­களை உயர் நீதி­மன்­றத்­தில் நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

ஆட­வ­ரின் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான இரண்டு சிறு­மி­க­ளுக்­கும் தற்­போது 13, 16 வயது. இரு­வ­ரின் அடை­யா­ளத்­தைக் காக்க, ஆட­வரின் பெய­ரும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், மன­நல அறிக்கை ஒன்­றில், அறி­வாற்­றல் நடத்தை சிகிச்சை மூலம் ஆட­வர் பல­ன­டை­ய­லாம் என்று பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆட­வ­ரின் தண்­டனை விதிப்பு பின்­னா­ளில் தெரி­விக்­கப்­படும்.