ரிவர் வேலி குளோஸ் நடைபாதையில் ஏறிய கார்: 2 சிறுவர்கள் உட்பட ஐவர் காயம்

ரிவர் வேலி குளோ­சில் ஒரு வாக­னம் கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பா­தை­யில் ஏறி விபத்­துக்­குள்­ளா­ன­தில் இரண்டு சிறு­வர்­கள் உட்­பட ஐந்து பேர் காய­ம­டைந்­த­னர்.

நான்கு வயது சிறுமி, காரை ஓட்­டிச் சென்ற 65 வயது மாது, 36 மற்­றும் 43 வய­துள்ள இரண்டு பாத­சா­ரி­கள் ஆகி­யோர் சிங்கப்பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக போலி­சார் கூறினர். காரை ஓட்­டிய மாது விசா­ர­ணை­யில் போலிசாருக்கு உதவி வரு­கி­றார்.

அவர்­க­ளைத் தவிர, ஐந்து வயது சிறு­மியை அவ­ரது பெற்­றோர் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்லப்பட்டதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

மார்­டின் ரோட்­டு­ட­னான ரிவர் வேலி குளோஸ் சாலை சந்­திப்பை நோக்கி கார் மிக வேக­மா­கச் சென்­ற­தாக சம்­ப­வத்தை நேரில் பார்த்­த­வர்­கள் கூறி­னர். நடை­பா­தை­யில் ஏறிய வாக­னம், அங்­கி­ருந்த மரங்­க­ளைக் கீழே தள்­ளி­விட்டு, இரண்டு விளக்­குக் கம்­பங் களில் மோதிய பின்­னர் நின்­றது.

வாக­னம் நிற்­கும்­போது அரு­கில் இருந்த ஐந்து வயது சிறுமி வாக­னத்­தில் அடி­பட்டு புல்­த­ரை­யில் விழுந்­த­தாக சம்­ப­வத்­தைப் பார்த்­த­வர்­கள் கூறி­னர். அரு­கில் இருந்­த­வர்­கள் சிறுமியைத் தூக்கி பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைத்­த­தும் அவர்­கள் குழந்­தையை மருத்­து­வ­ ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர்.

சம்­பவ இடத்­துக்கு வந்த சிங்­கப்­பூர்­ கு­டி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் காய­ம­டைந்­த மற்­ற­வர்­களை மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு சென்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!