சவாலுக்காக சிங்கப்பூர் ஆற்றில் நீந்தச் சென்று உயிரிழந்த இந்திய ஆடவர்

சிங்கப்பூர் ஆற்றைக் கடக்குமாறு சவாலை ஏற்ற 45 வயது கதிரேசன், கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.

திரு கதிரேசன், போட் கீ அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இணையத்தில் விடுக்கப்பட்ட சவாலை ஏற்று அவர் அங்கு நீந்தச் ெசன்றார் என்று திரு ஸியே என்று மட்டும் பெயர் குறிப்பிட விரும் பிய அவரது நண்பர் கூறினார்.

1990களில் சிங்­கப்­பூர் ஆற்றை நீந்­திக் கடந்­த­தாக திரு கதி­ரே­சன் சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டார் என்­றும் சீனர்­க­ளின் ஏழா­வது மாதம் முடி­வ­தற்­குள் ஆற்­றைக் கடக்­கும்­படி அவ­ருக்கு சமூக ஊட­கத்­தில் சவால் விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் திரு ஸியே கூறி­னார். அத­னைச் செய்­ய­வேண்­டாம் என்று நண்­பரை எச்­ச­ரித்­த­தாக திரு ஸியே குறிப்­பிட்­டார். திரு கதி­ரே­சன் தமது பேச்­சைக் கேட்­க­வில்லை என்று சம்­ப­வத்­துக்கு மறு­நாள்­தான் அவ­ருக்­குத் தெரிந்­தது.

அச்­சம்­ப­வம் பற்றி வெள்­ளிக்­ கி­ழமை இரவு 8.45 மணிக்கு போலி­சா­ருக்­கும் இரவு 11.45 மணிக்கு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­கும் தெரி­விக்­கப்­பட்­டது.

பேரி­டர் உதவி மீட்­புக் குழு­வைச் சேர்ந்த முக்­கு­ளிப்­பா­ளர்­கள் வர­வழைக்­கப்­பட்டு ஆற்­றில் தேடு­தல் பணி மேற்­கொள்­ளப்­பட்­டது.

கரைக்கு சுமார் 60 மீட்டர் தொலைவில் ஆற்­றின் 3 மீட்­டர் ஆழத்­தில் அவ­ரது சட­லம் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது.

அவர் உயிர் இழந்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!