விருந்தில் 75 பேர்; பிரிட்டிஷ் மன்றத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்படாது

கொவிட்-19 தொற்­றுச் சூழ­லில் சிங்­கப்­பூர் தேசிய கலைக்­கூ­டத்­தில் உள்ள 'ஜெம்மா ஸ்டீக்­ஹவுஸ்' உண­வ­கத்­தில் 75 பேர் கலந்து கொண்ட இரவு விருந்தை நடத்­தி­ய­தற்­காக பிரிட்­டனை மைய­மா­கக் கொண்ட ஒரு தனி­யார் மன்­றத்­தின்­மீது இனி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­து இருக்கிறது.

'சோகோ ஹவுஸ்' என்ற அந்த மன்­றம், கடந்த அக்­டோ­பர் 31ஆம் தேதி 'ஹலோ­வீன்' கருப்­பொ­ரு­ளு­டன் அந்த உண­வ­கத்­தில் ஓர் இரவு விருந்­திற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அத­னை­ய­டுத்து, பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை மீறிய தற்­காக அதில் பங்­கேற்ற எழு­வர்­மீது இவ்­வாண்டு ஜூலை­யில் நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டிற்­கும் $2,000 அப­ரா­தம் செலுத்த இணங்­கி­யதை அடுத்து, அவர்­கள் மீதான குற்­றச்­சாட்டு மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

"அந்த எழு­வர்­மீ­தும் அம­லாக்க நட­வ­டிக்கை எடுத்து உள்­ளோம். பிரிட்­ட­னில் உள்ள 'சோகோ ஹவுஸ்' மன்­றத்­தின்­மீது நட­வடிக்கை எடுக்­கப்­போ­வதில்லை," என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

அந்த எழு­வ­ரைப் பற்­றிய விவ­ரங்­க­ளை­யும் அம்­மன்­றத்­தின்மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­த­தற்­கு­மான விவ­ரங்­களை உணவு அமைப்பு வெளி­யி­ட­வில்லை.

முன்­ன­தாக, பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை மீறிய தற்­காக 'ஜெம்மா ஸ்டீக்­ஹ­வுஸ்' உரி­ம­தா­ரர்க்கு கடந்த மே 19ஆம் தேதி $14,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!