நிபுணர்கள்: ‘மியூ’வால் புதிய அலை உருவாகாது

'மியூ' எனப் பெய­ரி­டப்­பட்ட புதிய, உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மி­யால் தொற்று அலை உரு­வாக வாய்ப்பு இல்லை என்று வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த 'மியூ' கிரு­மி­யைக் 'கவ­னிக்­கத்­தக்க திரி­பாக' உலக சுகா­தார நிறு­வ­னம் அண்­மை­யில் வகைப்­ப­டுத்தி இருந்­தது.

இந்­நி­லை­யில், உரு­மா­றிய 'டெல்டா' கிருமி ஏற்­ப­டுத்­திய பாதிப்பை 'மியூ' ஏற்­ப­டுத்­தும் பாதிப்பு விஞ்ச வாய்ப்­பில்லை என்று மருத்­துவ வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

இப்­போ­தைக்கு 90 விழுக்­காட்­டிற்­கும் மேலான கொரோனா பாதிப்­பிற்கு 'டெல்டா' கிரு­மியே கார­ண­மாக விளங்­கு­கிறது.

இப்­போ­தைய பாதிப்­பில் 'மியூ' கிரு­மி­யின் பங்கு ஒரு விழுக்­காட்­டிற்­கும் குறை­வு­தான் என்­றார் அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்­பின் (ஏ ஸ்டார்) உயிர்த்­த­க­வ­லி­யல் பிரி­வின் நிர்­வாக இயக்கு­நர் டாக்­டர் செபாஸ்­டி­யன் மௌஹா ஸ்டுஹோ.

"தென்­னாப்­பி­ரிக்­கா­வில் 'லேம்டா', 'மியூ' திரி­பு­கள் ஏற்­கெனவே தலை­காட்­டின. இப்­போது அவற்­றின் பாதிப்பு குறைந்து வரு­கிறது. ஆனால், 'டெல்டா' பாதிப்பு கூடி வரு­கிறது. மொத்த பாதிப்­பை­யும் உல­க­ளா­விய பர­வ­லை­யும் காணும்­போது, 'டெல்டா' கிரு­மியே தொடர்ந்து ஆதிக்­கம் செலுத்­தும்," என்றார் அவர்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­கழக இணைப் பேரா­சி­ரி­யர் டேவிட் ஆல­னின் கருத்­தும் இதை­யொத்தே இருக்­கிறது.

"மற்ற உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மி­க­ளைப் போலவே, 'மியூ' குறித்­தும் நாம் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும். அதே நேரத்­தில், இப்­போ­தைக்கு 'மியூ' குறித்து கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை என்றே நான் கூறு­வேன்," என்­றார் பேரா­சி­ரி­யர் ஆலன்.

கொலம்­பி­யா­வில் இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் தலை­யெ­டுத்த 'மியூ' ஒரு­கட்­டத்­தில் 80 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்­குக் கார­ண­மாக இருந்­தது. ஆனால், இப்­போது அதன் தாக்­கம் குறைந்து, 'டெல்டா'வின் தாக்­கம் அதி­க­ரித்­து உள்­ளது.

"இப்­போ­தைய கொரோனா தொற்­றுச் சூழ­லில், பர­வும் வேகத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் பாதிப்­பை­யும் பொறுத்­த­மட்­டில், 'டெல்டா' கிரு­மியே முன்­ன­ணி­யில் இருப்­ப­தால் மற்ற உரு­மா­றிய கிரு­மி­க­ளின் தாக்­கத்தை அத­னு­ட­னேயே ஒப்­பிட்­டுப் பார்க்க வேண்­டும்," என்­றார் பேரா­சி­ரி­யர் ஆலன்.

'டெல்டா'வைப் போலவே, மற்ற 'கவ­னிக்­கத்­தக்க திரிபு'களுக்கு எதி­ரா­க­வும் இப்­போ­தைய தடுப்­பூசி­கள் செய­லாற்­ற­லாம் என்­றார் டாக்­டர் செபாஸ்­டி­யன்.

கடந்த ஏப்­ரல் 4ஆம் தேதி 'கவ­னிக்­கத்­தக்க திரி­பாக' அறி­விக்­கப்­பட்ட 'டெல்டா', பின்­னர் மே 11ஆம் தேதி 'கவ­லை­ய­ளிக்­கக்­கூடிய திரி­பாக' அறி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!