மின்னிலக்கமுறையை தழுவும் மூத்த குடிமக்கள்

எஸ்ஜி மின்­னி­லக்க அலு­வ­ல­கம் நடத்­திய மின்­னி­லக்­கத் திறன் பயிற்­சி­கள் மூலம் 100,000க்கும் மேற்­பட்ட மூத்­தோர் பலன் அடைந்­துள்­ள­னர்.

பயிற்­சி­யில் ஈடு­பட்ட பத்­தில் ஒன்­பது பேர் தங்­கள் அன்­றாட வாழ்­வில் கற்­றுக்­கொண்ட மின்­னி­லக்­கத் திறன்க­ளைப் பயன்­

ப­டுத்­து­கின்­ற­னர்.

காணொளி அழைப்பு, அர­சாங்க மின்­னி­லக்­கச் சேவை­கள், மின்­னி யல் கட்­ட­ணம் செலுத்­தும் முறை ஆகி­ய­வற்­றுக்கு இந்த மூத்­தோர் தங்­கள் திறன்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

இது மின்­னி­லக்­கத் திறன் பயிற்சி­க­ளின் வெற்­றியை நிரூ­பிப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எஸ்ஜி மின்­னி­லக்க அலு­வ­ல­கம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தால் நிறு­வப்­

பட்­டது.

மின்­னி­லக்க அடிப்­ப­டை­யில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­தா­யத்தை உரு­வாக்க அர­சாங்­கம் மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று.

அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் மின்­னி­லக்­கத் திறன் கொண்­டி­ருப்­பதை உறுதி செய்ய இலக்கு வகுக்­கப்­பட்­டுள்­ளது.

மின்­னி­லக்­கத் திறன் அவ்­வ­ள­வாக இல்­லா­த­வர்­க­ளுக்கு எஸ்ஜி மின்­னி­லக்க அலு­வ­ல­கம் ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டு­கிறது.

மூத்­தோர், எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய பிரி­வி­னர் உட்­பட மேலும் பல­ருக்கு மின்­னி­லக்­கத் திறன்­

க­ளைக் கற்­றுக்­கொ­டுக்­கும், வளங்களை மேம்படுத்தும் முயற்சி ­களில் அலுவ­ல­கம் இறங்கும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

 

$5 கைபேசித் திட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

 

குறைந்த வரு­மான மூத்­தோ­ருக்­கான $5 கைபே­சித் திட்­டங்­கள் இன்­னும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளன. எனவே இந்த மலி­வுத் திட்­டங்­க­ளுக்கு இப்­போதே பதிவு செய்­வோர் ஓராண்­டுக்­குப் பதி­லாக இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அந்­தச் சலு­கை­யைப் பெற­லாம்.

தங்­கள் அன்­பு­க்­கு­ரி­ய­வர்­க­ளு­ட­னும் பிற­ரு­ட­னும் கைபேசி மூலம் நிதி உதவி தேவைப்­படும் மூத்­தோர் தொடர்பு கொள்ள இந்த அர­சாங்க மானி­யத் திட்­டங்­கள் அவர்­க­ளுக்­குக் குறைந்­தது 5ஜிபி மாதாந்­தி­ரத் தரவு, குறைந்­தது $20 மதிக்­கத்­தக்க அடிப்­படை கைபேசி ஆகி­ய­வற்­றைத் தரு­கிறது.

இதன்­மூ­லம் புதிய மின்­னி­லக்­கத் திறன்­களை இந்த மூத்­தோர் கற்­றுக்­கொள்­ள­லாம் என்று தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­த­வும் தொழில்­நுட்­பம் சார்ந்த திறன்­

க­ளைக் கற்­றுக்­கொள்­ள­வும் மூத்­தோரை ஊக்­கு­விக்க தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ அறி­வித்த பல்­வேறு திட்­டங்­களில் இது­வும் ஒன்று.

சமூ­கப் பரா­ம­ரிப்பு உதவி பெறும் அல்­லது வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் பொது வாட­கைத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் வீட்­டில் வசிக்­கும் 60 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள் இந்­தத் திட்­டத்­துக்­குத் தகுதி பெறு­கின்­ற­னர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி, 10,000க்கும் மேற்­பட்ட 60 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட மூத்­தோர் சமூ­கப் பரா­ம­ரிப்பு உதவி பெற்­ற­னர்.

இது­வரை $5 கைபே­சித் திட்­டங்­க­ளால் 7,900க்கும் மேற்­பட்ட மூத்­தோர் பல­ன­டைந்­துள்­ள­னர்.

தரவு வரம்பை இந்த மூத்­தோர் மீறி­னால் கூடு­தல் கட்­ட­ணம் செலுத்த வேண்­டி­ய­தில்லை. ஆனால் அவர்­க­ளது இணை­யச் சேவை­யின் வேகம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும். இந்­தத் திட்­டத்­தின்­கீழ் இல­வச சிம் அட்­டை­யும் இல­வச அழைப்­போர் அடை­யா­ளச் சேவை­யும் வழங்­கப்­படும்.

கடந்த ஜூன் மாதத்­தி­லி­ருந்து இந்­தத் திட்­டத்­தில் இணை­யும் மூத்­தோர் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இந்­தச் சலு­கை­யைப் பெறு­வர், கடந்த ஆண்டு ஜூலை மாதத்­துக்­கும் இவ்­வாண்டு மே மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் இத்­திட்­டத்­தில் இணைந்த மூத்­தோ­ருக்கு கூடு­த­லாக ஓராண்டு

நீட்­டிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!