இயக்குநர் சபைகளில் கூடுதல் பெண்கள்

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­நர் சபை­களில் முன்­பை­விட இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் கூடு­தல் பெண்­கள் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் பங்­குச்­சந்­தை­யில் இடம்­பெ­றும் ஆகப் பெரிய 100 நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­நர் சபை­களில் பெண்­க­ளின் விகி­தம் கடந்த ஆண்டு டிச­ம்­பர் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி 17.6 விழுக்­கா­டாக இருந்­தது. இவ்­வாண்­டில் முதல் ஆறு மாதங்­களில் இது 18 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது.

அர­சாணை பெற்ற கழ­கங்­க­ளின் இயக்­கு­நர் சபை­களில் பெண்­க­ளின் விகி­தம் 27.5 விழுக்­காட்­டி­லி­ருந்து 28.8 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

இப்­போது அனைத்து அர­சாணை பெற்ற கழ­கங்­க­ளின் இயக்­கு­நர் சபை­களில் பெண்­கள் இடம்­­பெ­று­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் போஸ்ட், ஃபார் ஈஸ்ட் ஹாஸ்­பிட்­டெ­லிட்டி டிரஸ்ட் ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளின் இயக்­கு­நர் சபை­களில் 50 விழுக்­காட்­டி­னர் பெண்­கள்.

இருப்­பி­னும், இயக்­கு­நர் சபை­களில் பெண்­க­ளின் விகி­தம் தொடர்­பாக வகுக்­கப்­பட்­டுள்ள இலக்கு இன்­னும் எட்­டப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!