மொத்தமாக உணவு வாங்கி கடைகளுக்கு உதவிக்கரம்

புதிய முன்­னோ­டித் திட்­டம் ஒன்­றின் மூலம் மத்­திய வர்த்­தக வட்­டார உண­வங்­கா­டிக் கடை­க­ளின் வரு­மா­னம் உய­ர­வி­ருக்­கிறது.

நல்­ல­தொரு நோக்­கத்­திற்கு தான­மாக வழங்க அந்­தக் கடை­

க­ளின் உணவை பொறுப்­பா­த­ர­வா­ளர் வாங்­கு­வது திட்­டத்­தின் முக்­கிய அம்­சம்.

இதன் மூலம் கடைக்­கா­ரர்­களும் உண­வைப் பெறு­வோ­ரும் பல­ன­டை­வர்.

டிபி­எஸ் வங்­கி­யின் 'உண­வங் காடி நிலைய தத்­தெ­டுப்பு' திட்­டம் முதல்­மு­றை­யாக தஞ்­சோங் பகார் பிளாஸா ஈரச்­சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­தில் நேற்­றுக் காலை தொடங்கி வைக்­கப்­பட்­டது.

அங்­குள்ள உண­வுக் கடை­களில் வாங்­கப்­பட்ட 'சிக்­கன் ரைஸ்', 'நாஸி லெமாக்' உள்­ளிட்ட உணவு வகை­கள் விநி­யோ­கத்­திற்­கா­கப் பொட்­ட­ல­மி­டப்­பட்­டன.

அவ்­வாறு தாயா­ரான சுமார் 600 உண­வுப் பொட்­ட­லங்­கள் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை வளாகத்­தில் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டன. அந்த மருத்­து­வ­ம­னை­யோடு ஊட்­ரம் சமூக மருத்­து­வ­

ம­னை­யின் முன்­க­ளப் பணி­யா­ளர்­களும் உண­வைப் பெற்­றுக்­கொண்­ ட­னர்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனையின் கட்­டு­மா­னத்தளத்­தைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­கும் உண­வுப் பொட்­ட­லம் வழங்­கப்­பட்­டது.

டிபி­எஸ் வங்கி வாரந்­தோ­றும் இவ்­வாறு மொத்­த­மாக உணவை வாங்கி விநி­யோ­கிக்­கும்.

இதன் மூலம் இத்­திட்­டத்­தில் பங்­கேற்­றுள்ள உண­வுக் கடை­

க­ளின் வரு­மா­னம் குறைந்­த­பட்­சம் 10 விழுக்­காடு உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வரும் வாரங்­களில் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் உள்ள இதர உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­கும் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் நடை­முறை தொடங்­கி­யது முதல் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட பகுதி என்­னும் கார­ணத்­தால் மத்­திய வர்த்­தக வட்­டா­ரம் இத்­திட்­டத்­திற்கு தொடக்­க­மா­கத் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளது.

முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளோடு உணவு தேவைப்­படும் குடும்­பங்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், இதர அற­நி­று­வ­னக் குழு­வி­னர் போன்­றோ­ருக்­கும் உண­வுப் பொட்­ ட­லம் விநி­யோ­கிக்­கப்­பட உள்­ளது.

திட்­டத்­தின் தொடக்க நிகழ்­வில் பங்­கேற்ற பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா, உணவு நிலை­யங்­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்­களை வர­வ­ழைக்­கும் விரி­வான நட­வ­டிக்­கையுடன் புதிய முன்­னோ­டித் திட்­டம் எந்த வகை­யில் பொருந்­து­கிறது என்­பதை விளக்­கி­னார்.

கட்­டுப்­பா­டு­கள் ஓர­ளவு தளர்த்­தப்­பட்டு, அலு­வ­லக ஊழி­யர்­கள் பல­ரும் தங்­க­ளது வேலை­யி­டத்­திற்­குத் திரும்­பிய பின்­ன­ரும் உணவை வாங்­கிச் செல்­லும்­போக்கே அதி­க­மா­கக் காணப்­

ப­டு­கிறது என்­றார் தஞ்­சோங் பகார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான குமாரி இந்­தி­ராணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!