சட்டவிரோதமான மருந்துகளின் இணைய விற்பனை அதிகரிப்பு

நோயாளிகளுக்கான மருந்துகளின் அதிகாரபூர்வமற்ற இணைய விற்பனை வெகுவாக அதிகரித்திருப்பதாக ‘இன்டர்போல்’ அனைத்துலகக் குற்றத்தடுப்பு அமைச்சு தெரிவித்தது. “கடந்த மூன்று ஆண்டுகளில், எங்களது செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் 3,000 முதல் 6,000 வரையிலான இணையத்தளங்களை எங்களது அமைப்பினர் மூடியுள்ளனர்.

போலி மற்றும் சட்டவிரோதமான மருந்துகளின் இணைய விற்பனையைத் தடுக்க இன்டர்போல் தனது திட்டத்தை 2008ஆம் ஆண்டு தொடங்கியது.

நைட்ரஸெபென் (nitrazepam) டோர்மிசியம் (dormicum) மற்றும் டிரமடோல் (tramadol) உள்ளிட்ட மருந்துகள், போதைப்பொருட்களுடன் டெலிகிராம் தளத்தில் விற்கப்பட்டு வருவதாக ஸ்டரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இந்த மருந்துகளை கைபேசிச் செயலிகள், ஒப்பனைப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வைட்டமின் மாத்திரைகள், விளையாட்டுப்பொருட்கள் எனச் சொல்லி விற்பனையாளர்கள் அவற்றை பொட்டலங்களில் விநியோகம் செய்துள்ளனர்.

“அடிமைத்தனமான புழக்கத்தைத் தூண்டக்கூடிய மருந்துகளில் மருத்துவக் காரணமில்லாத, தகாத பயன்பாடுகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை. ஏனெனில் அவற்றுக்கு கடுமையான பக்க விளைவுகள் உள்ளன,”

2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டுவரை ஆண்டுக்கு 187 லிட்டர் கொடெய்ன் சிரப் (codeine syrup), 62,000 கொடெய்ன் மாத்திரைகள் மற்றும் 140,000 தூக்க மாத்திரைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. இதே காலக்கட்டத்தில் இந்த மாத்திரைகளை இறக்குமதி செய்து விற்பனை செய்ததன் தொடர்பில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!