செய்திக்கொத்து

உள்ளூரில் புதிதாக 186 கொவிட் கிருமித்தொற்று சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 186 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 90 பேர், இதற்கு முன் தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பு இல்லாதவர்கள். 63 பேர் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர். தொற்று ஏற்பட்டோருடன் தொடர்பிருந்த மேலும் 33 பேர், கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

கிருமித்தொற்று ஏற்பட்ட நால்வர் 70 வயதைத் தாண்டியவர்கள். ஒரு முறை தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட அவர்களுக்கு மோசமான நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவர்களோடு, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐவருக்குத் தொற்று ஏற்பட்டது.

பேருந்து நிலையங்கள் குழுமம்: 416 கொவிட்-19 சம்பவங்கள்

நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி பேருந்து நிலையங்கள் கொவிட்-19 குழுமத்தில் மேலும் 26 தொற்றுச் சம்பவங்கள் சேர்க்கப்பட்டன. இந்தக் குழுமத்தில் குறைந்தது 416 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் எட்டு பேருந்து நிலையங்கள் குழுமத்தில் இடம்பெற்றன.

சாங்கி மருத்துவமனை குழுமத்தில் புதிதாக 21 தொற்றுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தின நிலவரப்படி அந்தக் குழுமத்தில் மோத்தம் 36 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மேலும் மூன்று குழுமங்களும் அறிவிக்கப்பட்ன. அவற்றில் ஒன்று சிராங்கூனில் உள்ள ரேடியன்ஸ் மாணவர் பராமரிப்பு நிலையம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!