மெய்நிகர் வாயிலாக நெடுந்தொலைவோட்டம்

சமூக உண்­டி­யல் நடத்­தும் 'வெர்ட்­ட­டிக்­கல் மாரத்­தான்' எனப்­படும் செங்குத்தான நெடுந்­தொ­லை­வோட்­டம் முதன்­மு­றை­யாக மெய்­நி­கர் வாயி­லாக நடை­பெற்­று­வ­ரு­கிறது.

கடந்த 10 ஆண்­டு­க­ளாக நடந்­து­வ­ரும் இந்­நி­கழ்வு கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக மெய்­நி­கர் வாயி­லாக நடை­பெ­று­கிறது. நேற்று தொடங்­கிய நெடுந்­தொ­லை­வோட்­டம் அடுத்த மாதம் 31ஆம் தேதி­வரை நடை­பெ­றும். அதன் மூலம் இரண்டு மில்­லி­யன் வெள்­ளி­யைத் திரட்­டு­வது இலக்கு.

பங்­கேற்­பா­ளர்­கள் மெய்­நி­கர் வாயி­லாக ஆசி­யா­வில் உள்ள ஆக உய­ர­மான ஐந்து இடங்­க­ளுக்­குச் செல்­வர். புக்­கிட் தீமா மலை அவற்­றில் அடங்­கும். மொத்­த­மாக 38,000 மீட்­டர் உய­ரத்தை ஏறு­மாறு பங்கேற்­பா­ளர்­களை ஊக்­கு­விக்க ஏற்­பாட்டா­ளர்­கள் எண்­ணம் கொண்­டுள்­ள­னர். 'ஸ்ட்­ராவா' போன்ற செய­லி­க­ளைக் கொண்டு பங்­கேற்­பா­ளர்­கள் தாங்­கள் ஓடிய தூரத்­தைக் கண்­கா­ணிக்­க­லாம். உடலை வருத்­திக்­கொண்டு உய­ரம் ஏறு­வது நமது வாழ்க்­கை­யில் எதிர்­கொள்ளும் சவால்­க­ளைக் குறிப்­ப­தா­கும் எனக் கல்வி மற்­றும் சமுதாய, குடும்ப மேம்­பாட்­டுத் துறை­க­ளுக்­கான துணை­ய­மைச்­சர் சுன் ஷுவெலிங் நெடுந்­தொலை­வோட்­டத்­தின் தொடக்க நிகழ்ச்சி­யில் கூறி­னார். குறிப்­பாகத் தற்போதுள்ள நெருக்­க­டி­யான சூழலுக்கு இது பொருந்­தும் என்று அவர் சொன்­னார். நாடா­ளு­மன்ற நாயகர் டான் சுவான் ஜின் உள்­ளிட்­டோ­ரும் தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!